முஸ்லிம்களை தவிர்த்து மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படும் என்ற மத்திய உள்துறை
அமைச்சர் அமித்ஷா கூறுகிறார்.அரசியல் சாசனத்தை பின்பற்றுவதாக உறுதிமொழி ஏற்ற
உள்துறை அமைச்சர் அதனை சொல்வது கேலிக்குரியதாக்கியுள்ளது.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு இந்து, சீக்கிய, சமண மற்றும் பௌத்த அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும் என அமித்ஷா
கூறுகிறார். தேசியளவில் தேசிய குடியுரிமை பதிவேட்டை (NRC)
நடைமுறைபடுத்துவதற்கு முன் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று அவர் உறுதியளிக்கிறார். NRC மற்றும் குடிமக்கள் திருத்த மசோதாவின் பின்னணியில் முஸ்லிம்களை பாரபட்சமாக நடத்தும் ஒரே நோக்கம் இருப்பதை இது அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்துகிறது.
இந்தியாவில் வாழும் பிற மதங்களை சார்ந்த
வெளிநாட்டினர் இயல்பாக அகதிகளாக மாறும் போது, முஸ்லிம்கள் மட்டும் அவர்களின் மதத்தின் காரணமாக எவ்வாறு ஊடுருவல்காரர்களாக மாறுகின்றனர் என்பதை விளக்க மறுக்கிறார்.
ஆளும் கட்சி மற்றும் அரசாங்கத்தில் உயர்
பதவியை வகிக்கும் ஒருவரிடமிருந்து இத்தகைய வெளிப்படையான, அப்பட்டமான மத வெறுப்பை நமது தேசம் இதுவரை கண்டதில்லை. முஸ்லிம்களை மட்டுமன்றி, முழு தேசத்தையும் மத வேறுபாடின்றி அதன் மக்களையும் அழித்து விடும்.
மத பாரபட்சத்தை முழுமையாக நிராகரிக்கும் நமது அரசியல் சாசனம் அதன் அடிப்படை கொள்கைகளில் ஒன்றாக மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கிறது.
இப்படி பட்ட உன்னதமானத தேசத்தில் வெறுப்பையும் ஒரு சமூகத்தின் மீது உள்ள குரோதமாகவே இதை பார்க்க தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக