வியாழன், 10 அக்டோபர், 2019

பொருளாதார மந்த நிலையை கண்டு கொள்ளதாத பா.ஜ.க அரசு

 ந்திய பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கடியை சந்தித்துள்ளதை அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. எனினும், இத்தகைய சூழலுக்கு நாம் எவ்வாறு வந்தோம்? என்பதற்கான காரணத்தையோ, அதனை எவ்வாறு சமாளிக்கப்போகிறோம்? என்பதற்கான பொறுப்பையோ அரசாங்கம் ஏற்க விரும்பவில்லை அல்லது இருட்டில் தான் உள்ளது என்பதை அதன் அதிகாரப்பூர்வ பதில்கள் தெரிவிக்கின்றன. 

பேரின பொருளாதார குறியீடுகளில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பது புதிய தலைமுறையினர் கார்களை வாங்குவதை நிறுத்தியதால் ஏற்பட்டதல்ல. இது  நாட்டின் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைத்த அமைப்பு சாரா மற்றும் விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள கடுமையான வீழ்ச்சியின் அறிகுறியாகும். 

மத்திய நிதியமைச்சர் அறிவித்த சமீபத்திய நடவடிக்கைகள்,  2014-19 ஆம் ஆண்டில் மோடி அரசு நடைமுறைப்படுத்திய அதிர்ச்சி மற்றும் வியப்பூட்டிய பண மதிப்பு நீக்கம் மற்றும் சிக்கலான ஜிஎஸ்டி போன்றவற்றால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் சேதத்தை சரிசெய்ய இயலாது. இந்த ஒப்பனை நடவடிக்கைகள் மோடி ஆட்சியால் உருவாக்கப்பட்ட பூஜ்ஜிய வளர்ச்சியிலிருந்து இந்திய பொருளாதாரத்தின் திறனைப் பற்றிய நம்பிக்கையை மீட்டெடுக்காது.


 இதில் கவலை தரத்தக்க அம்சம், 7 லட்சம் கோடி ரூபாய் கடனாக வாங்கி 6.6 லட்சம் கோடி ரூபாயை ஏற்கனவே வாங்கிய கடன்களுக்கு வட்டியாக செலுத்த வேண்டும். நம்முடைய மொத்த வருவாயே 19 லட்சத்து 62 ஆயிரம் கோடியாக இருக்கும்போது, அதில் வட்டிக்கு மட்டும் 6.6 லட்சம் கோடி என்றால் மீதமிருப்பது 13 லட்சம் கோடி ரூபாய் மட்டும்தான். இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு வழக்கமான செலவுகளைக்கூட அரசால் செய்ய முடியாது.

பேரழிவு தரும் பொருளாதார மந்த நிலையை நிவர்த்திச் செய்வதில்  மோடி அரசு முகம் கொடுக்க தவறினால் ,நாடு மிக பெரிய மிக பெரிய சீரழிவை சந்திக்கும் 

கருத்துகள் இல்லை:

ஷெர்னியும் ஆவ்னியும்!

நடிகை வித்யா பாலன் நடிப்பில் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் , ‘ ஷெர்னி ’ . அமித் மஸூர்கர் இயக்கியுள்ள இப்படத்தில்...