வியாழன், 10 அக்டோபர், 2019

முஸஃபர்நகர் கலவரம் வழக்கு: 40 குற்றவாளிகள் விடுதலை



முஸஃபர்நகர் கலவரம் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்களால் தீர்ப்பு வழங்கப்பட்ட 41 வழக்குகளில் 40ல் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டு, முஸ்லிம்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒரே வழக்கில் அவர்களுக்கு மட்டும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  
 2002 குஜராத் இனப்படுகொலைக்கு பின்னர்2013 முஸஃபர்நகர் கலவரங்களே நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற பெரும் கலவரமாகும். வன்முறையில் 63 மக்கள் கொல்லப்பட்டுவீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுபெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் விடுவிக்கப்பட்டதற்கு பல காரணங்கள் உள்ள போதும்விசாரணையின் போது காவல்துறையினர் வேண்டுமென்றே மேற்கொண்ட குறைபாடுகளே பல வழக்குகளில் குற்றவாளிகள் தப்புவதற்கு காரணமாக அமைந்தது. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களான பெரும்பான்மை சாட்சிகள்மிரட்டப்பட்டும் லஞ்சம் கொடுக்கப்பட்டும் நீதிமன்றங்களில் பிறழ்சாட்சிகளாக மாற்றப்பட்டனர். மேலும்இவற்றிற்கு கட்டுப்பட மறுத்தவர்கள் தாக்கப்பட்டனர்.
 உயர்நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்து வழக்குகளை தொடர அரசு தரப்பிற்கு விருப்பம் இல்லாததும் தெரிய வருகின்றது. உத்தர பிரதேச அரசாங்கத்தின் அழுத்தத்துடன் சாட்சிகளிடமிருந்து கிடைக்கும் குறைவான ஒத்துழைப்பும் மேல் முறையீடு செய்யாததற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இதுதான் முடிவென்றால்முஸஃபர்நகர் கலவரங்களில் நீதி கிடைக்காது என்ற நிலை வந்துவிட்டது என்பதுதான் பொருளாகும். குறிப்பிட்ட மக்களுக்கு எதிராக நடைபெற்ற இத்தகைய பெரிய அளவிலான வன்முறையில் கூட்டு விடுவிப்புகள் என்பது நீதித்துறையை பரிகசித்து நாட்டிலுள்ள நீதித்துறை மீதான நம்பிக்கையை குலைப்பதற்கு இட்டுச் செல்லும். இத்தகு சூழலை சமூகம் என்ன விலை கொடுத்தேனும் தடுத்திட வேண்டும்.
 அரசு தரப்பு இந்த வழக்குகளை உயர் நீதிமன்றங்களுக்கு கொண்டு சென்று ஒவ்வொரு குற்றவாளியும் தண்டிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிபடுத்த வேண்டும் 

கருத்துகள் இல்லை:

ஷெர்னியும் ஆவ்னியும்!

நடிகை வித்யா பாலன் நடிப்பில் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் , ‘ ஷெர்னி ’ . அமித் மஸூர்கர் இயக்கியுள்ள இப்படத்தில்...