வியாழன், 2 நவம்பர், 2017

தமிழகத்தின் புதிய வேட்டைக்காரன் என்.ஐ.ஏ.?

                                                                                          

                                                                                                               - நேரடி ரிப்போர்ட்

இந்திய திரு  நாட்டில்  இன்றைக்கு முஸ்லிம் அடையாளம் கொண்டு வாழ்வதே சி-ரமமாக உள்ளது. ‘பெயர் கான் என்பதற்காக ஒருவன் தீவிரவாதி என்று பொருளல்ல’ என்று பொட்டில் அறைந்தாற்போல தெரிவித்திருந்தார் உச்ச நீ-திமன்ற’ முன்-னாள் தலைமை நீ-திபதி லோதா. ஆனாலும் முஸ்லிம்களை தீவிரவாதி, பயங்கரவாதி என்ற கண்ணோட்டத்துடன் பார்ப்பது, எழுதுவது இன்றுவரை குறைந்த பாடில்லை. அரசாங்கங்களுக்கு பிரச்சனைகளை திசை திருப்புவதற்கும் முஸ்லிம்களை தொடர்ந்து அச்சத்தில் வைப்பதற்கும் இது பயன்படுகிறது. முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று கைது செய்வதும் பல வருடங்கள் கழித்து அவர்களை நிரபராதிகள் என்று விடுவிப்பதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
பொது சிவில் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் முஸ்லிம்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் இவற்றின் வேகம் அதிகமாக இருக்கிறது. இச்சூழலில்தான் மதுரையில் சில முஸ்லிம் இளைஞர்களை அல் காய்தா அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று கூறி தேசிய புலனாய்வு குழுமமான என்.ஐ.ஏ. கைது செய்தது.
நவம்பர் மாதம்  27 ஆம் தேதி மதுரையை ச-õர்ந்த அப்பாஸ் அலீ, சம்சுதீன், கரீம் ராஜா, ஆசிக்  ரஹ்மான், அய்யூப், தாவூத் சுலைமான், சம்சுதீன் உடன் பிறந்த சகோதரர் நசீர் ஆகிய ஏழு நபர்களை பிடித்-துச் சென்-று பின்னர் இரண்டு நபர்களை விடுவித்தது. அப்பாஸ் அலீ, தாவூத் சுலைமான், கரீம் ராஜா, அய்யூப் அலீ மற்றும் சம்சுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் தாவூத் சுலைமான் சென்னையில் கைது செய்யப்பட்டார். மற்றவர்கள் மதுரையில் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திராவின் சித்தூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு (ஏப்ரல் 7, 2016), கேரளாவின் கொல்லம் ஜுடீசியல் நீதிமன்ற வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு (ஜூன் 15), கர்நாடகாவின் மைசூர் நீ-திமன்ற வளாக குண்டுவெடிப்பு (ஆகஸ்ட் 1), ஆந்திரா நெல்லூர் குண்டுவெடிப்பு (செப்டம்பர் 12) மற்றும் கேரளாவின் மலப்புரம் ஜுடீசியல் நீதிமன்ற கழிப்பறையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு (நவம்பர் 1) ஆகிய வழக்குகளில் இவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ. தெரிவிக்கிறது. இந்த குண்டுவெடிப்புகளில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடங்களில் இருந்து பெறப்பட்ட பென் டிரைவ் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் இதை நடத்தியது ‘பேஸ் மூவ்மண்ட்’ அமைப்பு என்று தெரிய வந்ததாக காவல்துறை தெரிவித்தது.
இதில் மைசூர் குண்டுவெடிப்பு வழக்கு என்.ஐ.ஏ.விற்கு மாற்றப்பட்டது. அந்த விச-õ-ரணையை தொடர்ந்துதான் என்.ஐ.ஏ. தற்போது இந்த கைதுகளை நிகழ்த்தியுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் தங்கள் குற்றங்களை ஒப்புக் கொண்டதாக நவம்பர் 29 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் என்.ஐ.ஏ. தெரிவித்தது.
நவம்பர் 28 அன்று இவர்களை கைது செய்ததாக என்.ஐ.ஏ. கூறியபோதும் இவர்கள் இரண்டு தினங்களுக்கு முன்னரே கைது செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் மதுரையில் உள்ள இந்தோ - திபத் எல்லை பாதுகாப்பு படை முகாமில் வைத்து சி-த்திரவதை செய்யப்பட்டதாகவும் அவர்கள் கூறினர். கைது செய்யப்பட்டவர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களை மட்டுமே தனது ஆதாரமாக கூறும் என்.ஐ.ஏ. வேறு எந்த வலிமையான ஆதாரத்தையும் சமர்ப்பிக்காதது நமது சந்தேகங்களை வலுக்கச் செய்கிறது.
சம்சுதீனின் தம்பியான நசீர் என்பவரை ஒரு விபத்து குறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்று, கண்களை கட்டி கடுமையாக சித்திரவதை செய்துள்ளனர். சி-த்திரவதை காரணமாக இவர் காலில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சி-கிச்சை பெற்று வருகிறார். சம்சுதீன் எங்கே என்று கேட்டே இவரை சித்திரவதை செய்துள்ளனர். வேலைக்கு சென்றுவிட்டு மறுதினம் வந்த சம்சுதீன் அவராகவே இந்தோ திபத் எல்லை பாதுகாப்பு படை முகாமிற்கு சென்றுள்ளார். தப்பு செய்தவர்கள் யாராவது அவர்களாகவே செல்வார்களா என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பொதுவாக தங்கள் தரப்பு வாதங்களுக்கு வலு சேர்ப்பதற்காக கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் இருந்து வெடிபொருட்கள் உள்ளிட்டவைகளை கைப்பற்றியதாக காட்டுவது காவல்துறையின் வழக்கம். இவை பெரும்பாலும் வைத்து எடுக்கும் ரகத்தை சேர்ந்தவையாக இருக்கும். இந்த வழக்கில் என்.ஐ.ஏ. இதே யுக்தியை கையாண்டிருப்பது அதன் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகிறது.
கைது செய்-யப்-பட்-ட-வர்-க-ளின் வீடுகளில்
சோதனை நடத்தும் போது பொதுவான நபர்கள் ச-õட்சியாக இருக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை என்.ஐ.ஏ. ஏற்காத போது மக்கள் சோதனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பு தெரிவிக்கப்படாத ஒரு இடத்தில் கவரில் இருந்த செல்ஃபோனை கைப்பற்றப்பட்ட பொருளாக என்.ஐ.ஏ. காட்டியது. தீவிரவாத வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட என்.ஐ.ஏ. இவ்வாறு தரம் தாழ்ந்து செயல்பட்டது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
கைது செய்யப்பட்ட அப்பாஸ் மற்றும் சம்சுதீன் இருவருக்கும் தமிழ் கூட தெளிவாக படிக்கத் தெரியாது என்றும் அவர்கள் தமிழகத்தை தாண்டி வேறு மாநிலங்களுக்கு இதுவரை
செ-ன்றதில்லை என்றும் அவர்களின் குடும்பத்தினர் கூறும் நிலையில் இவர்கள் வெளி மாநிலங்களுக்கு
சென்று குண்டு வைத்ததாக என்.ஐ.ஏ. கூறுகிறது.
நெல்பேட்டை கீழ மாரட் வீதியை சேர்ந்த சம்சுதீனை, போலீஸ் பக்ருதீனின் கூட்டாளி என்று கூறி ஒரு வருடத்திற்கு முன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். தற்போது கைது செய்யப்படுவதற்கு முன் சில நாட்களாக காவல்துறையினர் அவர் வீட்டை கண்காணித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஒரு நபர் மீது சம்சுதீன் பைக்கை மோதிய வழக்கு குறித்து விசாரிக்கத்தான் அவரை தேடுகிறோம் என்று காவல்துறையினர் அவர் வீட்டில் தெரிவித்துள்ளனர். ஆனால் தனது மகனுக்கு சைக்கிள் மட்டும்தான் ஓட்டத் தெரியும் என்று அவரின் தாயார் நம்மிடம் கூறினார். அத்துடன் தன் மகன் எட்டாவது வரைதான் படித்தவன் என்றும் தமிழை தவிர வேறு எந்த மொழியும் அவனுக்கு தெரியாது என்றும் கண்ணீர் மல்க கூறினார்.
சம்சுதீன் கைது, நசீர் சித்திரவதை என்று அத்துமீறல்கள் தொடர அவரின் குடும்பத்தினர் மீதும் பொய் வழக்கு போடுவதாக காவல்துறை மிரட்டுகிறது என்றும் தெரிவித்தனர்.
இஸ்மாயில்புரத்தை சேர்ந்த அப்பாஸ் அலீ பெயிண்டர் வேலை பார்த்து வருபவர். 26ஆம் தேதி இரவு விசாரணை என்று அழைத்து செல்லப்-பட்-ட-வர். இரண்டு தினங்கள் கழித்து தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார், சாதாரண மொபைல் போன் வைத்துள்ள தனது மகன் சர்வதேச தொடர்புகளை எப்படி வைத்திருந்தான் என்று கேட்கிறார் அவரின் தந்தை நைனா முகம்மது.
தாருல் இல்ம் என்ற பெயரில் ஒரு நூலகத்தை நடத்தி வந்த அப்பாஸ், அதில் இஸ்லாத்தை அறியக் கூடிய புத்தகங்களை இலவசமாக வழங்கி வந்ததாகவும் அதற்காகத்தான் அவர் கைது செய்யப்பட்டாரா என்றும் கேள்வி எழுப்புகிறார் அவர் சகோதரர் இஸ்மாயில்.
பள்ளிவாசலில் தொழுதுவிட்டு வரும் போது அய்யூப் அலீ கைது செய்யப்பட்டுள்ளார். கரீம் ராஜாவிற்கு தற்போதுதான் பாஸ்போர்ட் கிடைத்துள்ளது. ஆனால் அவரை மூன்று மாதங்களாக கண்காணித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கண்காணிப்பு வலையத்தில் உள்ள நபருக்கு பாஸ்போர்ட் வழங்க காவல்துறை எப்படி அனுமதி கொடுத்தது?
சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் தாவூத் சுலைமான்தான் இந்த அமைப்பின் முக்கிய சூத்திரதாரி என்று என்.ஐ.ஏ. கூறுகிறது. ஆதாரம் எதுவும் இல்லாமல் எப்படி தன் மகனை குற்றவாளி என்று கூறலாம் என கேட்கிறார் அவரின் தந்தை முகம்மது அப்துல்லாஹ்.
சமீபத்தில் பெருநாள் தினத்தன்று அப்பாஸ் அலீ, தாவூத் சுலைமான், அய்யூப் அலீ மற்றும் கரீம் ராஜா ஆகியோர் தலைப்பாகை அணிந்து புகைப்படம் எடுத்து அதை ஃபேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளனர். இதனையும் அவர்களின் சில ஃபேஸ்புக் பதிவுகளையும்தான் காவல்துறை பெரிய ஆதாரமாக கூறுகின்றனர். பெருநாள் தினத்தன்று தலைப்பாகை அணிந்து புகைப்படம் எடுப்பது என்பது சாதாரண விஷயம். இதனையும் ஃபேஸ்புக் பதிவுகளையும் ஆதாரங்களாக காட்டுவது மிகப்பெரிய விசாரணை ஆணையமான என்.ஐ.ஏ.விற்கு அழகா?
ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்துத்துவ அமைப்பினர் பதிவிட்டு வரும் கருத்துகளை நாம் தினமும் கண்டு வருகிறோம். இந்து ராஷ்டிரம் அமைப்போம் என்றும் முஸ்லிம்களை அழிக்க துடிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பை ஆதரிப்போம் என்றும் முஸ்லிம்களையும் இன்னபிற சி-றுபான்மையினரையும் தலித்களையும் அழிப்போம் என்றும் இந்துத்துவ அமைப்பினர் தொடர்ந்து பதிவுகளை இட்டு வருகின்றனர். இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் கொலைக்கு முன்னரும் பின்னரும் இவர்கள் இட்ட பதிவுகளை காவல்துறையும் என்.ஐ.ஏ.வும் பார்க்கவில்லையா? இவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
இந்த கைது நடவடிக்கைகளை என்.ஐ.ஏ.தான் மேற்கொண்டது என்றும் உள்ளூர் காவல்துறைக்கு இதில் தொடர்பு கிடையாது என்றும் கூறினார் காவல்துறை ஆணையர் சைலேஷ் குமார். ஆனால் தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா காவல்துறையின் உதவியுடன்தான் இந்த கைதுகள் நடைபெற்றதாக என்.ஐ.ஏ. வழங்கிய செய்திக் குறிப்பில் தெளி-வாக கூறப்-பட்-டுள்ள-து.
மதுரை காவல்துறையினர் இரண்டு குழுக்களாக செயல்படுவதாகவும் காவல்துறை ஆணையரையும் மீறிய ஒரு அதிகார வட்டம் செயல்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய கைது நடவடிக்கைகளை முன்னின்று நடத்தியவர் ஏ.டி.எஸ்.பி. மாரிராஜன். கைது செய்யப்பட்டவர்கள் விசாரிக்கப்படும் போது, என்.ஐ.ஏ. அதிகாரிகளுடன் எஸ்.ஐ.டி. பிரிவை
சே-ர்ந்த மாரிராஜனும் உடன் இருந்துள்ளார்.
2011 முதல் மதுரையை சுற்றி கைப்பற்றப்பட்ட பல்வேறு வெடிக்காத குண்டுகளின் பின்னணியில் உள்ளவர் இவர் என்று குற்-றம்-சாட்-டப்-ப-டு-கி-ற-து. “இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை நாங்கள் நெருங்கி விட்டோம். ஆனால் மாரிராஜன் அவர்களின் கைதுக்கு முட்டுக்கட்டையாக இருந்தார்” என்று இந்த வழக்குகளை விசாரித்த இன்ஸ்பெக்டர் மாடசாமி கூறியதை நாம் மறந்து விட முடியாது.
இந்த வழக்கில் விசாரணை ஏஜென்சியின் மற்றொரு போக்கும் வித்தியாசமாக இருக்கிறது. பொதுவாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களை சந்திப்பதற்கு உரிய முன் அனுமதியை பெற வேண்டும். ஆனால் இங்கோ கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர்களை மட்டுமின்றி, வழக்கறிஞர்கள், சமுதாய முக்கியஸ்தர்கள் என அனைவரையும் காவல்துறையே அழைத்து சந்திக்க வைக்கிறது. ஆனால் தாவூத் சுலைமானுடன் மட்டுமே பேச அனுமதிப்பதையும் அவரும் கிளிப்பிள்ளை போல் ‘நாங்கள்தான் செய்தோம்’ என்பதையே மீண்டும் மீண்டும் கூறுகிறார். ஏனையவர்களுடன் பேசுவதற்கு வழக்கறிஞர்கள் அனுமதி கோரிய போது காவல்துறை அதனை மறுத்துவிட்டது.
இதுவரை வெடிக்காத குண்டுகளால் பரபரப்பாக இருந்த மதுரையில் என்.ஐ.ஏ.வின் இந்த கைதுகளால் பரபரப்பு அதிகரித்துள்ளது. மக்களிடையே சமூக நல்லிணக்கம் வளர்ந்து வரும் நிலையில் அதை சீர்குலைக்கும் விதத்தில் முஸ்லிம் சமூகத்தை தீவிரவாதிகள் என்று சி-த்தரிக்கும் வேலையை என்.ஐ.ஏ. செய்து வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிது புதிதாக இயக்கங்களை அறிமுகம் செய்வதும் அதன் பெயரை கூறி கணி-ச-மா-ன நபர்களை கைது செய்த பிறகு வேறொரு புதிய இயக்கத்தை கொண்டு வருவதும் உளவுத்துறை மற்றும் இத்தகைய விசாரணை அமைப்புகளின் வேலையாக இருக்கிறது. இதன் வரிசையில்தான் தற்போது ‘பேஸ் மூவ்மண்ட்’ என்பதை அறிமுகம் செய்கிறார்கள். இனி இதை காரணமாக வைத்து எத்தனை நபர்களை கைது செய்ய உள்ளார்களோ?
சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் ஏன் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று மேலிடத்தில் இருந்து நெருக்குதல் கொடுக்கப்பட்டதாகவும் அதனை சரி செய்யவே இந்த கைதுகள் என்றும் பத்திரிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலிட நெருக்குதல் காரணமாக என்.ஐ.ஏ.வில் பணியாற்றிய காவல்துறை அதிகாரி ஒருவர் மாற்றல் வாங்கி வேறு துறைக்கு
செ-ன்-றதாகவும் பத்திரிகை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
அப்ரூவராக என்.-ஐ.-ஏ.-வால் மாற்-றப்-ப-டும் நிலையில் உள்ள தாவூத் சுலைமானை பகடைக்காயாக வைத்து இந்த வழக்கை முடித்து நல்ல பெயர் எடுக்க என்.ஐ.ஏ. முயல்கிறது. குற்றத்தை ஒப்புக் கொண்டு ஐந்து வருடங்கள் சி-றை தண்டனை பெற்றுக் கொள்ளுங்கள் என்று என்.ஐ.ஏ. பேரம் பேசுவதாகவும் தக-வல்-கள் தெரிவிக்கின்றன. இதே வழிமுறையைதான் பெங்களூர் வழக்கிலும் என்.ஐ.ஏ. பின்பற்றியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
என்.-ஐ.-ஏ.-வின் பத்து நாட்-கள் கஸ்-டடி முடிந்த பின் பெற்-றோ-ரை-யும் வழக்-க-றி-ஞ-ரை-யும் சந்-தித்த தா-வூத் சுலை-மான், என்.-ஐ.-ஏ.-வின் நிர்ப்-பந்-தம் மற்-றும் சித்-தி-ர-வதை கா-ர-ண-மா-கவே தான் குற்-றத்தை ஒப்-புக் கொண்-ட-தாக தெரி-வித்-தார்.
தமிழகத்தில் சிறப்பு பிரிவினரும் சில காவல்துறையினரும் மட்டுமே செய்து வந்த பொய் வழக்கு வேலைகளை தற்போது என்.ஐ.ஏ.வும் தொடங்கியுள்ளதையே மதுரை கைதுகள் உணர்த்துகின்றன. கைது செய்யப்பட்டவர்கள் உண்மையிலேயே குற்றவாளிகள் என்றால் அதற்கான உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து அவர்களை நீ-திமன்றத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு அமைப்புகளால் இங்குள்ள சிலர் கவரப்பட்டதாக தெரிந்தால் அவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி அவர்களையும் பொது சமூகத்தில் மீண்டும் இணைக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் ஐ.எஸ். போன்ற அமைப்புகளால் சிலர் கவரப்பட்ட போது இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டது. (சமூக வலைதளங்களில் ஐ.எஸ்.புகைப்படங்களுக்கோ வீடியோகளுக்கோ இவர்கள் லைக் செய்திருப்பார்கள். வேறு எந்த நடவடிக்கையிலும் ஈடுபட்டிருக்க மாட்டார்கள்).
இதை விடுத்து வழக்குகள் தேவை என்பதற்காக கைது செய்வதும் சித்திரவதை செய்வதும் தொடர்ந்தால் என்.ஐ.ஏ. மீதான பொதுமக்களின் நம்பிக்கையும் நம்பக தன்மையும் முற்றிலுமாக சீர்குலைந்துவிடும்.
                                                                                                                        வசந்தன்
                                                                                                                  புதிய  விடியல் 
                                                                                                             டிசம்பர்   15-312016 






கருத்துகள் இல்லை:

ஷெர்னியும் ஆவ்னியும்!

நடிகை வித்யா பாலன் நடிப்பில் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் , ‘ ஷெர்னி ’ . அமித் மஸூர்கர் இயக்கியுள்ள இப்படத்தில்...