வியாழன், 2 நவம்பர், 2017

யானையை பிடிப்பதற்கு பதிலாக எறும்பை பிடித்து துன்புறுத்துகிறார் மோடி

விடியல்: இந்திய பண பரிவர்த்தனையின் முக்கால்வாசிக்கும் மேலான பண மதிப்பை செல்லாது என அறிவித்திருப்பது மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. இது கடும் விளைவை ஏற்படுத்தும் என தெரிந்தும், மோடி அரசாங்கம் இதனை வலுக்கட்டாயமாக அமல்படுத்துவதன் உள்நோக்கம் என்ன?
ஜோதி சிவஞானம்: இந்தியாவுக்கென்று ஒரு நீண்ட நெடிய பாரம்பரியம் இருக்கிறது. மிகப் பெரிய பொருளாதார அறிஞர்களின் வழிகாட்டலின் அடிப்படையிலும் ஆலோசனையிலும்  தான்  மிகப்பெரிய திட்டங்கள் சுதந்திர காலகட்டம் தொடங்கி  இப்பொழுது வரை நடைமுறையில் இருக்கிறது. கே என் ராஜன், முஹால்னா விஷ்ணு, வி.கே.ஆர். ராவ், சுக்மாயி சக்ரவர்த்தி, பிரம்மானந்தா இப்பொழுது கௌசிக் பாசு, ரகுராம் ராஜன் என குறிப்பிட்டு சொல்லக்கூடிய பல பொருளாதார அறிஞர்களின் வழிகாட்டல் படிதான் அரசு  பல்வேறு திட்டங்களை செயல்படுத்து இருக்கிறது.  இவர்கள் எல்லோருமே மக்கள் நலன் சார்ந்து தான் தங்கள் கருத்துகளையும் திட்டங்களையும் வகுப்பார்கள்.
இந்த நடைமுறையை மோடி அரசு பின்பற்றாமல் ஏதோ ஒரு என்.ஜி.ஓ-வின் கருத்தை ஏற்-றுக் கொண்டு எடுத்தோம் கவிழ்த்தோம் என்கின்ற முடிவுக்கு வந்-துள்ள-து. தேர்தல் வாக்குறுதிகளா-ன கருப்பு பணம், கள்ள பணம் ஆகிய இரண்டையும் மீட்போம், இந்திய  பொருளா-தார வளர்ச்சி விகிதத்தை உயர்த்துவோம் என் வாக்குறுதிகளை நிறைவேற்ற இந்த அரசு தவறி விட்டது. இன்னொருபுறம் இறங்குமுகமாக உள்ள பொருளாதார வளர்ச்சி விகிதம். இவை இரண்டையும் நிவர்த்தி செய்வதில் இந்த அரசு தோல்வி அடைந்து விட்டது. ஆக மக்களின் எதிர்பார்ப்பை திசை திருப்பவே மோடி அரசாங்கம் இந்த திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது.
விடியல்: கருப்பு பணம், கள்ளப்பணம் ஆகி-ய-வற்றை கட்டுக்குள் கொண்டு வந்து விடுவோம் என்கின்றனரே! இதில் உண்மை இருக்கிறதா? அது சாத்தியமா?
ஜோதி சிவஞானம்: 2014-ன் கணக்குப்படி கருப்பு பணம் என்பது இந்திய சந்தையில் 23 சதவிகிதம் என்கிறது உலக வங்கி. ஆனால், பொருளாதார அறிஞர் தேவ் கார்  50 சதவிகிதம் கருப்பு பணம் இந்திய சந்தையில் நடமாடுகிறது என்கிறார்.
கருப்பு பணம் 95 சதவிகிதம் சொத்துக்களாக உள்ளது. அதில் 72 சதவிகிதம் வெளிநாடுகளிலும் 28 சதவிகிதம் உள்நாட்டிலும் இருக்கிறது. பணமாக உள்ளது வெறும் 5 சதவிகிதம் தான். இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இந்த ஐந்து சதவிகிதத்தை மீட்க தான் இப்பொழுது மோடி கிளம்பி இருக்கிறார். 95 சத-வி-கி-த கருப்பு பணம் சொத்துக்களாக வெளிநாடுகளில், ஸ்விஸ் வங்கிகளில் இருக்கிறது. அதற்கான பட்டியல் அவர்களிடம் இருக்கிறது. அதன் மேல் நடவடிக்கை எடுப்பதற்கு பதில் அப்பாவி மக்களை வஞ்சித்து வருகிறார். குற்றத்தில் ஈடுபட்ட யானையை விட்டு விட்டு ஒன்றுமறியா எறும்புகளை தண்டித்த கதையாகிவிட்டது.
 விடியல்: இந்த  அசாதாரண நிலைகளுக்கு இடையில், இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?
ஜோதி சிவஞானம்: பண பரி-வர்த்-தனை அதி-கம் உள்ள நமது நாட்-டில் அத-னை உட-ன-டி-யாக நிறுத்-து-வது தோல்-வியை தரும். அது சாத்தியமில்லாத திட்டம். 125 கோடி மக்களிடத்தில் புரளுகின்ற பணத்தை ஒரே இரவில் மாற்றப் போகிறேன் என்று குறைந்த பட்ச அறிவு உள்ளவன் கூட கூற-மாட்-டான்.
இதற்கு முன்னர் இது போன்று பல நாடுகளில் ரூபாய் நோட்-டு-கள் திரும்ப பெறப்-பட்-டுள்ளதே என்று  சிலர் குறிப்பிடுகிறார்கள். ஆம் நமது நாட்டில் கூட நடந்தது. அப்பொழுது மிகப் பெரிய பாதிப்பு மக்களுக்கு இல்லை. எங்களை போன்றோருக்கு 5000 ரூபாய் நோட்டு 1000 ரூபாய் நோட்டு எப்படி இருக்கும் என்பதே தெரியாது. ஆனால் இன்று சாமானியனிடம் கூட ஆயிரம், ஐந்நூறு நோட்டுகள் சர்வசாதாரணமாக புழக்கத்தில் இருக்கிறது. ஒரு பக்கம் புதிய நோட்டுகள் வந்து கொண்டு இருக்கும், அதேவேளை பழைய நோட்டும் மதிப்-பி-ழக்-கா-மல் சந்தையில் புரளும். ஆனால் இப்-போ-து திடீரென பணத்தை செல்லாது என்றது தான் வேடிக்கை.
விடியல்: மக்-க-ளின் சொந்தப் பணம் வங்கியில் (சேமிப்பு அல்ல) முடக்கப்படுகிறது.  இந்திய பொதுமக்கள் மீது நடத்திய துல்லிய தாக்குதல் என இதை வரையறை செய்யலாமா?
ஜோதி சிவஞானம்: கண்டிப்பாக இது ஒட்டு மொத்த மக்களையும் பாதிக்கும் விஷயம். அறிவித்த பத்து  நாளில்  மூன்றில் இரண்டு பங்கு பணம் வங்கிக்கு வந்து சேர்ந்து விட்டது. இன்னும் சில நாளில் மீதி பணமும் வந்து சேரும், ஆனால் சேர்ந்த பணத்தை திருப்பி புதிய நோட்டுகளாக கொடுக்கக்கூடிய வசதி அரசாங்கத்திடம் இருக்கிறதா என்றால் இல்லை. நாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் வெறும் 53 சதவிகிதம் தான். அதிலும் 75 ச-தவிகிதம் ஏதோ ஒரு திட்டத்திற்காக வேண்டி வைத்திருக்கும் கணக்குகள்.   இன்னொருபுறம்  வங்கி கட்டமைப்போ, ஏ.டி.எம் வசதிகளோ மிக குறைவு. ஒரு லட்சம் மக்களுக்கு 11 வங்கிகளும்  ஒரு லட்ச மக்களுக்கு 16 ஏ.டி.எம் வசதிகளும் தான் இருக்கிறது.  அப்படி இருந்தாலும் புதிதாக வந்த இரண்டாயிரம் நோட்டை நிரப்புவதற்கான வசதிகள் கிடையாது. நகர்ப்புறங்களிலேயே இந்த சிக்கல் என்றால் கிராமப் புறங்களில் சொ-ல்ல வேண்டியதில்லை.
விடியல்: அடுத்து என்ன மாதிரியான நிலைமைகள் உருவாகும்?
ஜோதி சிவஞானம்: இதனால் பணப்புழக்கம் மிக வேகமாக குறைந்துள்ளது . தமிழ் நாடு இதில் கொஞ்சம் பரவாயில்லை, வட இந்தியாவில் எவ்-வி-த கட்டமைப்பும் இல்லாத நிலையில் அங்கு நிலைமை இன்னும் மோசமாகும்.  ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கலவரம் ஏற்படலாம் என எச்சரித்திருக்கிறது. மக்களை நீ இவ்வளவு தான் பணம் எடுக்க வேண்டும், பணம் எடுத்தவன் விர-லில் மை வைக்க வேண்-டும் என கார்ப்பரேட்களின் நலன்களுக்காக பொதுமக்கள் மீது நடத்திய துல்லிய தாக்குதலுக்கு வரலாற்றில் முன்னுதாரணம் உண்டா?  வேறு தேசங்களில் இப்படி நடந்திருக்கிறதா?
விடியல்: அர-சாங்-கம் உண்-மை-யில் செய்-தி-ருக்க வேண்-டி-யது என்ன?
ஜோதி சிவஞானம்:  உண்மையில் இவர்களுக்கு நாட்டின் மீது அக்கறை இருந்-தால், கே.எம் முன்ஷி கமிட்டியின் பரிந்துரையை நடை முறைபடுத்தி இருக்க வேண்-டும். நாட்டில் இருக்கக் கூடிய இரண்டு மிகப்பெரிய கட்சிகள் வருடத்திற்கு 15 ஆயிரம் கோடி செலவு செய்கின்றன. இப்படி செலவு செய்ய அவர்களுக்கு பணம் எவ்வழியில் கிடைக்கிறது என்று கண்டறிய வேண்டும். இரண்டாவது, முறைகேடாக பணத்தை பதுக்கி வைத்திருக்கும் நபர்களை  பற்றி தெரிந்து கொள்ள தகவல் அறி-யும் உரி-மை சட்டத்தில் கேள்வி கேட்கும் உரிமை வழங்க வேண்டும். இந்த இரு பரிந்துரைகளை நடை முறைபடுத்தி இருந்தால் பல சிக்கல்கள் தீர்ந்து தீர்-வு-கள் கிடைத்திருக்கும்.
                                                                                                                      அபு ஹனாதி
                                                                                                                     புதிய  விடியல் 
                                                                                                                        டிசம்பர்  2016 

கருத்துகள் இல்லை:

ஷெர்னியும் ஆவ்னியும்!

நடிகை வித்யா பாலன் நடிப்பில் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் , ‘ ஷெர்னி ’ . அமித் மஸூர்கர் இயக்கியுள்ள இப்படத்தில்...