கடந்த மூன்றாண்டு கால
பா ஜ க ஆட்சியில் பணமதிப்பிழப்பு என்ற மெத்தப்படித்த மேதாவிகளின் முடிவும், சரிவர திட்டமிடாத
ஜி எஸ் டி வரிவிதிப்பால் நாடு முழுவதிலும் தொழில்கள் நசிந்து போனதும் நிகழ்ந்தாலும் தொலைக்காட்சியிலும் வானொலியிலும் மோடி விளம்பரங்கள் காதை புண்ணாக்குகின்றன.
பணமதிப்பிழப்பின் முதல் வாரமே குஜராத் மாநிலம் மோர்பியை மையமாக கொண்ட சலவை கற்கள் தொழிலில் ஈடுபட்டு வந்த 4.5 லட்சம் பேர் பணியிழந்ததாக திஇந்து'ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது.தொடர்ந்து கட்டுமானத்தொழில், மோட்டார் வாகனத்தொழில்கள் என ஒவ்வொரு தொழிலிலும் இச்சீர்மிகு ஆட்சியில் லட்சக்கணக்கானோர் தங்கள் வாழ்வாதாரங்களைத் தொலைத்தனர்.
இராமனின் தூதுவன் கை பூமாலையாக எட்டேகால் இலட்சண பா ஜ க சிறப்பாக நாட்டை ஆண்டது.
கற்கால பசு காதலர்கள் தாஜ் மஹலையும் விட்டுவைக்கவில்லை.
2004-2014 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் கூட கல்வி உரிமை சட்டம், வன உரிமை சட்டம், நாட்டுப்புற வேலை உறுதி சட்டம் , தெருவோர வணிகர்கள் பாதுகாப்புச் சட்டம், நில கையகப்படுத்தல் நியாயமான இழப்பீட்டுச் சட்டம் , தகவல் உரிமைச் சட்டம் என மக்கள் சார்ந்த சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன, ஆனால் பா ஜ க ஆட்சியில் கொல்லைப்புறம் வழியாக பணமதிப்பிழப்பும், ஜி எஸ் டி யும் வந்ததுதான் மிச்சம்.சட்டியில் மக்களுக்காக சட்டமியற்றும் அறிவு இருந்தால்தானே அகப்பையில் கொஞ்சமாவது வரும்.
இந்தியர் ஒவ்வொருவர் கணக்கிலும் வரவேண்டிய பதினைந்து லட்சம் வராவிட்டால் கூட பரவாயில்லை இந்தியர்களின் பொதுத்துறை வங்கிகளின் 20000 கோடி பணத்துடன் லண்டன் ஓடிய விஜய் மல்லையாவை இன்னும் இந்தியா கொண்டு வரவில்லை ஆனால் பேச்சு மட்டும் கைவீசம்மா கை வீசு என காது வரை கிழியும்.
காங்கிரஸ் ஊழலுக்காவது அவர்களது ஆட்சியிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டது ஆனால் அரை இலட்சத்தை எண்பது கோடியாக்கும் வித்தை அறிந்த அமித் ஷா மகன் மீது எவ்வித விசாரணையும் ஊழலை ஒழிக்க வந்த அவதாரங்கள் செய்யவில்லை.
பரமார்த்த குருவின் சீடர்கள் குருவிற்காக குதிரை வாங்க சென்று குதிரை முட்டை என பூசணிக்காய் வாங்கி சென்றதும் அது கைதவறி கீழே விழுந்து உடைந்த போது அருகில் இருந்த புதரில் இருந்து துள்ளி குதித்த முயலைப்பார்த்து குட்டியே இவ்வளவு துடியாக இருக்கிறது என வியந்த பரமார்த்த குருவின் அறிவாற்றலுக்கு சற்றும் குறையாத மைய பா ஜ க மோடி அரசு தலைமை என்றால் மிகையல்ல.
ஜி எஸ் டி யும் பண மதிப்பிழப்பும் மோடியும் சீடர்களும் கொண்டு வந்த குதிரை முட்டைகள், முயல் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் பொருளாதாரம் என்று ஒப்பிட்டாலும், பேனை பெருமாளாக்கும் வித்தை அறிந்த தந்தி முதல் டைம்ஸ் ஆப் இந்தியா வரை வாங்கப்பட்ட ஊடகங்களின் ஆதரவு பரமார்த்த குருவிற்கு இல்லை பா ஜ க விற்கு உண்டு.
நன்றி: வழக்கறிஞர் லஜபதி ராய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக