திங்கள், 20 நவம்பர், 2017

பயணங்கள் தொடரும்


நான்  பயணம் செய்வது வெறும் பொழுது போக்காக மட்டுமே இருக்க முடியும் என்று இதுவரை நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தீர்கள் என்றால் அந்த எண்ணத்தை மாற்றி விடுங்கள். என்  பயணங்கள் உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் எனக்கு  பெரிதும் உதவுகிறது.
நீங்கள் புதிதாக ஓர் இடத்துக்கு செல்கிறீர்கள், அங்குள்ள நிலப்பரப்பை புகைப்படம் எடுக்கிறீர்கள் அல்லது அந்த சுத்தமான காற்றை சுவாசிக்கிறீர்கள் என்றால் அது உங்கள் உடலுக்கும், மனதுக்கும் பெரும் பயனை அளிக்கும்
அதுவும் நண்பர்களோடு ஊர் சுற்றுவதில் இன்னும் அலாதியான இன்பம் இருக்கிறது.
ஒற்றை சிந்தனையும் அற்புதமான இடமும். ஒன்று கூடினால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும் அப்படியான இடத்தாம் கீழ் கண்ட பகுதி.
ஆம் நிலகிரி வனகாப்பகம் உட்பட்ட
மசினகுடிகூடலூர் மோயார்சிங்காரா அணைக் கட்டு முதுமலை தேசிய பூங்காஉள்ளீட்ட பகுதிகளை பார்க்கும் சந்தர்ப்பங்களை படைத்த இறைவன் எங்களுக்கு வழங்கினான்.மிகவும் அற்புதமான பயணமாக இது அமைந்தது.  

நீலகிரி வனக்காப்பகம்   வடமேற்கில்   கர்நாடகம் மற்றும்  கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது.  1940 இல் தொடங்கப்பட்ட "இதுவே தென்னிந்தியாவின்  முதல்  வனக்காப்பகம் " ஆகும். யானை,  காட்டெருமைபுலிசிறுத்தைகரடிமான்,  பறக்கும் அணில்பெரிய இந்திய சிவப்பு அணில்காட்டு நாய்காட்டுப்பன்றிமுள்ளம்பன்றிநரிகாட்டு முயல்முதலைகீரிகழுதைப்புலிமலைப்பாம்பு போன்ற பல்வேறு வகையான விலங்குகள் இங்கு உள்ளன. ஆனால் நாங்கள் சில விலங்குகளை மட்டுமே பார்க்க முடிந்தது. அதிஷ்டம் இருந்தால் மட்டுமே எல்லா விலங்குகளையும் பார்க்க முடியும். இருந்த போதிலும் இது போன்ற இடங்களில் இன்னும் கடுமையான சட்டங்களை கொண்டு இவ்விலங்குகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் அரசு செயல்பட  வேண்டும்.

பாமரமக்கள் எப்பொழுதுமே சட்டத்திற்க்கு கட்டுப்படுவார்கள். ஆனால், அரசும் அரசு அதிகாரிகளிடமிருந்து இக்காடுகள் அதன் தன்மையை இழந்து வருவதாக நான் உணர்கிறேன்.
 இந்தியாவில் ஏறத்தாழ 200க்கும் மேற்ப்பட்ட வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன. அவற்றில் நூற்றுக்கும் அதிகமானவை தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டு அரசால் சுற்றுலா தளமாக  ஊக்குவிக்கப்படும் இடங்களாக உள்ளன. இதில் நீலகிரியை சுற்றியுள்ள இப்பகுதியில் பல்வேறு பட்ட புவியியல் அமைப்புகள்மாறுபட்ட சீதோஷன நிலைகள்கணக்கிட முடியாத வகைகளில் விலங்கினங்கள் மற்றும் பறவைகள் என தேசியப்பூங்காவிற்க்கான அதிசயங்களை அள்ளித் தருகிறது.
அனைவரும் பார்க்க வேண்டிய இடமாக இவ்விடம் திகழ்கிறது. முதுமதலை யானைகள் சரணாலயம் குழந்தைகளை அதிகமாக கவரும்.





கருத்துகள் இல்லை:

ஷெர்னியும் ஆவ்னியும்!

நடிகை வித்யா பாலன் நடிப்பில் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் , ‘ ஷெர்னி ’ . அமித் மஸூர்கர் இயக்கியுள்ள இப்படத்தில்...