செவ்வாய், 20 அக்டோபர், 2020

மருத்துவப் படிப்புகான இடஒதுக்கீட்டை மறுக்கும்  மத்திய அரசு 




மிழகத்தில் உள்ளமருத்துவக் கல்லூரி இடங்களில், அகில இந்தியத் தொகுப்புக்குமாநிலங்கள் வழங்கும் மருத்துவ இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்க வேண்டிய இடஒதுக்கீட்டை மத்திய அரசு கடந்த நான்குஆண்டுகளாக மறுத்து வருகின்றது. 

இந்திய மருத்துவக்கவுன்சில் விதிகளின்படி ஒவ்வொரு மாநிலமும் இளநிலை மற்றும் பட்டயப் படிப்புகளில் 15 விழுக்கhடு இடங்களையும், முதுகலைப் படிப்புகளில் 50 விழுக்கhடு இடங்களையும் மத்தியத் தொகுப்புக்கு ஒதுக்குகின்றன.ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மருத்துவக் கல்வி இடங்களை நிரப்பும்போது, அந்தந்த மாநிலங்களில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டுக்கொள்கையின்படி அவற்றை நிரப்பலாம் என்று மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகள் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் 69 விழுக்கhடு இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்கhடு இடங்கள் வழங்கப்படுகின்றன.மாநிலத் தொகுப்புகளிலிருந்துவழங்கப்படும் மருத்துவக் கல்விக்கhன இடங்களில் ஓ.பி.சி.பிரிவுக்கு இடஒதுக்கீட்டை வழங்கhததால், கடந்த ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளில் 395 இடங்களும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கhன இடங்களில் 425 இடங்களும் இதர பிற்படுத்தப்பட்டோருக்குப் பறிபோயின.

இதுதொடர்பான வழக்கில்,சென்னை உயர்நீதிமன்றம் இதர பிற்படுத்தப்பட்டோருக்கன இடஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.மேலும் இதுபற்றிய சட்ட வரையறைகளை மூன்று மாதங்களில் உருவாக்கும்படியும், அதற்கhன சிறப்புக் குழுவை அமைக்கும்படியும் உத்தரவிட்டது. 

இந்நிலையில்,இந்த இடஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே செயல்படுத்தஉத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஷ்வர ராவ், ஹேமந்த் குப்தா மற்றும் அஜய் ரெகோத்தகி அமர்வில் காணொளி மூலமாக விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழக அரசின் சார்பில் வாதிடடட  மூத்த வழக்கறிஞர்கள் நடப்பு ஆண்டிலேயே 50 சதவிகித இடஒதுக்கீட்டை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்றனர்.மத்திய அரசு தரப்பில்கூடுதல் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்த இடஒதுக்கீடு தொடர்பாக உருவாக்கப்பட்டகுழு, கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி ஆலோசனை நடத்தியது. அதில், ஓ.பி.சி. மட்டுமின்றி, எம்பிசி  எஸ்.டி ., இடஒதுக்கீடு பற்றியும் பேசப்பட்டது.இதில் தமிழக அரசின் பிரதிநிதியும் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில், இடஒதுக்கீட்டை 2021 ஆம் ஆண்டு செயல்படுத்துவது பற்றி பேசப்பட்டதே தவிர,நடப்பு ஆண்டில் நடைமுறைப்படுத்துவது பற்றி எதுவும்பேசவில்லை. தமிழக பிரதிநிதியும் எங்களிடம் இதுபற்றி ஆலோசிக்கவோ அல்லது வலியுறுத்தவோஇல்லை என்று தெரிவித்து இருக்கிறார்.மருத்துவப் படிப்புக்கான இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோர் புறக்கணிக்கப்பட்டுஉள்ள நிலையில், தமிழக அரசு ஒருபுறம்உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு, மற்றொருபுறம் இந்த ஆண்டே இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தமத்திய அரசு நியிமித்த குழுவில் வலியுறுத்தாதது ஏன்? கூடுதல் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த கருத்து உண்மைஎனில், தமிழக அரசு இந்தப் பிரச்சினையில்அலட்சியப் போக்குடன் செயல்பட்டது கண் கூடாக தெளிவாகிறது.தமிழகத்தில் உள்ள26 அரசு மருத்துவக் கல்லூரிகளில்,இளநிலை படிப்புக்கு 3650 இடங்களும், மேற்படிப்புக்கு 1758 இடங்களும் உள்ளன. இவற்றிலிருந்து அகில இந்தியத்தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நடப்பு ஆண்டே 50 விழுக்கhடு இடங்கள் கிடைப்பது சந்தேகம் தான். -- 

பொதிகை வசந்தன் 


கருத்துகள் இல்லை:

ஷெர்னியும் ஆவ்னியும்!

நடிகை வித்யா பாலன் நடிப்பில் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் , ‘ ஷெர்னி ’ . அமித் மஸூர்கர் இயக்கியுள்ள இப்படத்தில்...