சடியோ மானே
சாலாஹ்
மானே அசாத்திய திறமைசாலி மட்டும் அல்ல, சிறந்த மார்க்கப்பற்றாளரும் கூட. ஐவேளை தொழுபவர், மது பக்கம் நெருங்காதவர், சூதாட்டத்தில் பங்கு பெறாதவர், எளிமையானவர், இஸ்லாமிய மார்க்க போதனைகளை பெரிதும் பின்பற்றுபவர். இப்படியான பண்புகளால் கவரப்பட்ட க்ளாப், மானேவை அணிக்குள் கொண்டுவர பெரிதும் முயற்சித்தார். அன்றைய தேதிக்கு, அதிக விலை கொடுக்கப்பட்ட ஆப்பிரிக்க வீரர் என்ற அடையாளத்தோடு லிவர்பூல் அணிக்குள் நுழைந்தார் மானே.
இவ்வளவு தொகைக்கு தகுதியானவரா என்ற விமர்சனத்திற்கு தன் ஆட்டத்தின் மூலம் பதிலடி கொடுத்த மானே அடுத்த சில வருடங்களில் நட்சத்திர வீரராக உயர்ந்தார்.
2019-2020 இங்கிலிஷ் ப்ரீமியர் லீக் சாம்பியன் பட்டத்தை லிவர்பூல் அணி முதல்முறையாக வெல்வதற்கு தன் அணியின் சக வீரரான முஹம்மது சாலாஹ்வுடன் இணைந்து காரணமாக அமைந்தார் மானே. இந்த காலக்கட்டத்தில் லிவர்பூல் அணிக்காக அதிக கோல்கள் அடித்தது இவர்கள் இருவரும் தான்.
இன்று, லிவர்பூல் அணி, தங்களின் முஸ்லிம் வீரர்களுக்காக தனியாக சமையல்காரரை அமர்த்தியுள்ளது. தொழுகைக்காக இடங்களையும் ஒதுக்கியுள்ளது. ப்ரீமியர் லீக் போட்டிகள் 1992-ல் தொடங்கப்பட்ட போது, இஸ்லாமிய கோட்பாடுகளை சரியாக பின்பற்றிய முஸ்லிம் வீரர்கள் என்றால் அது மிகச் சிலர் தான். ஆனால் இன்றோ நிறைய முஸ்லிம் வீரர்கள் இஸ்லாமிய மார்க்க நெறிமுறைகளை சரிவர பின்பற்ற முயற்சிக்கின்றனர்.
அதிகப்படியான முஸ்லிம் வீரர்கள் ஆட்ட நாயகன் விருதை பெறுவதால், Champagne மதுவை பரிசாக கொடுப்பதை நிறுத்திவிட்டு கோப்பைகள் கொடுக்கும் பழக்கத்தை கொண்டு வந்தது ப்ரீமியர் லீக் நிர்வாகம்.
சடியோ மானே போன்றோராலேயே இந்த மாற்றங்கள் சாத்தியப்பட்டன என்றால் அது மிகையல்ல. மிக குறைந்த நேரத்தில் (2.5 நிமிடங்கள்) ஹாட்-ட்ரிக் கோல்களை அடித்தவர், ஆப்பிரிக்க கண்டத்தின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் விருதை பெற்றவர் என்பது போன்ற எண்ணற்ற சாதனைகளை தாண்டி மானே பெரிதும் போற்றப்படுவது இவருடைய எளிமைக்காக தான். உடைந்த ஸ்க்ரீன் கொண்ட மொபைல் போனை இவர் பயன்படுத்துவது தொடர்பான செய்தி வெளிவந்தது நம்மில் பலரும் அறிந்த ஒன்று தான்.
தன் எளிமைக்கு இஸ்லாமை காரணம் காட்டும் மானே, தான் தொழுகைக்கு செல்லும் லிவர்பூல் அல்-ரஹ்மா பள்ளிவாசலின் கழிவறைகளை அவ்வப்போது சுத்தப்படுத்துவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார். தான் பிறந்த கிராமமான செனெகலின் பம்பாலியில் பள்ளிக்கூடம், பள்ளிவாசல் மற்றும் மருத்துவமனையை நிறுவியிருக்கிறார் மானே. மேலும் செனெகல் அரசிற்கும் தொடர்ந்து உறுதுணையாக இருந்து வருகிறார்.
வெற்றிக்கான காரணமாக, தன் பெற்றோரின் வளர்ப்பையே சுட்டிக்காட்டுகிறார் மானே. இவருடைய தந்தை பம்பாலி கிராம பள்ளிவாசலில் இமாமாக பணியாற்றியவர்.
மானே, சாலாஹ் போன்றவர்களால் நாங்கள் இஸ்லாமை நோக்கி ஈர்க்கப்பட்டோம் என நூற்றுக்கணக்கான ட்விட்கள் வருவது நிச்சயமாக ஏதேச்சையானது அல்ல, அதில் புரிந்துக்கொள்ள பல பாடங்கள் உள்ளன.
படம் 1: வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு சிறுவர்களுடன் செல்லும் மானே.
படம் 2: வெற்றிக்காக இறைவனுக்கு நன்றி செலுத்தும் மானே மற்றும் முஹம்மது சாலாஹ்.
படம் 3: லிவர்பூல் அல்-ரஹ்மா பள்ளிவாசலின் கழிவறையை சுத்தம் செய்யும் மானே.
செய்திக்கான ஆதாரங்கள்:
1. Foot The Bal
2. Liverpool Echo
3. I News
4. About Islam
5. Premier League
6. The Telegraph
7. Mirror
8. Week Ali
நன்றி அஷீக் அஹமத்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக