கடந்த சில ஆண்டுகளாக 800 அரசு மருத்துவர் பணியிடங்கள் ஒழிக்கப்பட்டு விட்டதால் மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அளவுக்கு படுக்கைகளையும், மருத்துவர்களையும் அதிகரிக்க வேண்டும். மருத்துவர்களின் ஊதிய விகிதத்தை நிர்ணயிப்பதில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும்.
2009 ஆம் ஆண்டில், அரசு மருத்துவர்களின் பதவி உயர்வு, ஊதியம் தொடர்பாக 354/2009 என்ற விரிவான அரசு ஆணை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டது. இதில் மருத்துவர்களுக்கான பதவி உயர்வு, பணி நியமனம், ஊதியம், தானாக முன்வந்து விலகுவதற்கான வழி முறைகள் ஆகியவை விரிவாக வகுக்கப்பட்டன. மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியம் மறுசீரமைப்பு செய்யப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால் அரசின் இந்த அரசாணை நடைமுறைப்படுத்தப் படாததால், அரசு மருத்துவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அதன்பின்னர்தான் இவற்றை1 நிறைவேற்றக் கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் போராட்டத்தில் இறங்கினர். அப்போது தமிழக அரசின் சார்பில் 6 வார காலம் அவகாசம் கேட்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் சுகாதாரத்துறை சார்பில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் அரசு மருத்துவர்கள் போராடுகிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
, அரசு டாக்டர்கள் சங்கமும், போராட்டத்தில் குதிப்பதால், அரசு மருத்துவமனைகளின் சேவைகள் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினர், ஊதிய உயர்வு, காலமுறை பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 25ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுஉள்ளனர். இவர்கள், புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் பிரிவுகளை புறக்கணித்து வருகின்றனர். நான்காவது நாளாக, நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், ஐந்து டாக்டர்கள், சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சுரேஷ் கோபால், ரமா ஆகிய இரண்டு டாக்டர்கள் மயக்கமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.டாக்டர்களுக்கு ஆதரவாக, பயிற்சி டாக்டர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அரசு மருத்துவமனைகளில், நோயாளிகள் வெகு நேரம் காத்திருந்து, சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. இன்று முதல் பணி புறக்கணிப்பில் ஈடுபட போவதாக, பயிற்சி டாக்டர்களும் அறிவித்து உள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர், வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும், அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால், மருத்துவமனைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே தமிழகத்தில், டெங்கு, மலேரியா, நிமோனியா உள்ளிட்ட காய்ச்சலால், மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டாக்டர்கள் போராட்டத்தால், உரிய சிகிச்சை கிடைக்காமல், நோயாளிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின், சென்னை மாவட்ட தலைவர் சந்திரசேகர் கூறியதாவது:எங்கள் சங்கத்தில், 16 ஆயிரம் டாக்டர்கள் உள்ளனர். அவர்கள், இன்று வருகை பதிவில் கையெழுத்திடாமல், பணியில் ஈடுபடுகின்றனர். நாளை மற்றும் நாளை மறுநாள், டெங்கு, அவசர சிகிச்சை பிரிவுகளை தவிர்த்து, அனைத்து பிரிவுகளையும் டாக்டர்கள் புறக்கணிக்க உள்ளனர். மருத்துவமனைகள் முடங்கும். அரசு பேச்சு நடத்தி, தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.போராட்டத்திற்கு ஸ்டாலின் ஆதரவுபோராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்களுக்கு, அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
கிராமப்புற மற்றும் பழங்குடியின, மலைவாழ் மக்களுக்கு மருத்துவ சேவை புரியும் அரசு பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முதுநிலைப் படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஏற்ப உரிய சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் சுமார் 18 ஆயிரம் பேர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஆனாலும் அவசர சிகிச்சை, அவசர அறுவை சிகிச்சை, மகப்பேறு மற்றும் உயிர் காக்கும் சிகிச்சைகள் மருத்துவர்களால் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுபோல காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கும் மருத்துவர்களின் சேவை தொடர்கிறது.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் சுமார் 18 ஆயிரம் பேர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஆனாலும் அவசர சிகிச்சை, அவசர அறுவை சிகிச்சை, மகப்பேறு மற்றும் உயிர் காக்கும் சிகிச்சைகள் மருத்துவர்களால் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுபோல காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கும் மருத்துவர்களின் சேவை தொடர்கிறது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக