நவம்பர் 1 தமிழ் நாடு தினம் என முதல்வர் அறிவித்திருக்கிறார்.ஏன் இந்த தினத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் அதற்கு பின்னால் இருக்க கூடிய அரசியல் என்ன? இதை இன்றைய தலைமுறை தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக இந்த பதிவு
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகாவை உள்ளடக்கி ‘மெட்ராஸ் ராஜஸ்தானியையும்’ என ஒற்றை மாநிலமாக இருந்து வந்தது. இந்த சூழலை மாற்றி, தமிழ்நாட்டைத் தனி மாநிலமாக, மொழிவாரி மாநிலமாகப் பிரிக்க வலியுறுத்தி, சென்னை பொட்டி ஸ்ரீராமுலு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டார்.
ஸ்ரீராமலு உயிரிழந்ததைத் தொடர்ந்து,
தமிழ்நாட்டில் வன்முறை வெடித்தது. அதைத் தொடர்ந்து 1953ஆம் ஆண்டு, மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும் என மத்திய அரசிடமிருந்து அறிவிப்பு வெளியானது
அதன்பின், தந்தை பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, காமராசர் உள்படப் பலர் போராட்டம் நடத்தியதன் விளைவாக 1956ஆம் ஆண்டு நவ. 1 ஆம் தேதி, மெட்ராஸ் மாகாணம், மெட்ராஸ் ஸ்டேட், ஆந்திரா, கர்நாடகா, கேரளா எனப் பிரிக்கப்பட்டது. தமிழ்நாடு தனி மாநிலமாக உருவானது இதன் பின்னர்
சங்கரலிங்கம் தமிழ் மொழியை தாய் தமிழ் நாட்டையும் மிகவும் நேசித்த ஒரு தேசியவாதி இவர் ஒருகிணைந்த மெட்ராஸ் மாகாணத்திலிருந்து தனி தமிழ் நாடு வேண்டும் என்று தொடர்ந்து அன்றைய காங்கிரஸ் அரசை வலியுறுத்தி வந்தார்.இறுதியாக மதராஸ் மாகாணம்' என்றா பெயர் இருப்பது... கூடாது... கூடவே கூடாது.. தமிழ்நாடு என பெயர் மாற்றுங்கள்" என்று கூறி 1956 ஜூலையில் . தனியாக மொழிவழி மாகாணம் வேண்டும். அரசியல் தலைவர்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சாதாரண மக்களைப் போல் வாழ வேண்டும். தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும். தொழில்கல்வி, இந்தியா முழுவதும் மதுவிலக்கு என்று12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மைதானத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.அப்போதிருந்த காங்கிரஸ் அரசு சங்கரலிங்கனாரின் கோரிக்கைகளை ஏற்கவில்லை.
அதற்குள் சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதம் பல சலசலப்புகளை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டது. ம.பொ.சிவஞானம்., அண்ணாத்துரை, காமராசர், ஜீவானந்தம் உட்படப் பல தலைவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொல்லிக் கோரிக்கை விடுத்தனர். இருந்தும் உண்ணாவிரதம் நிறுத்தப்படவில்லை.நாளாக நாளாகச் சங்கரலிங்கனாரின் உடல்நிலை மோசமானது. விருதுநகருக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார் அண்ணா. அப்போது தொடர்ந்து மூன்று கடிதங்களை எழுதினார் சங்கரலிங்கனார்.
“பொதுஜனங்களின் விருப்பத்திற்கு மாறாகத் தவறான வழியில், கண்மூடித்தனமாகப் போய்க் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி ஒழிந்தே தீரும். அறிவுத் திறன் இருந்தால் திருத்திக்கொள்ளட்டும்” என்று ‘எச்சரிக்கையுடன்’ எழுதியிருக்கிறார்.
அக்டோபர் 10ந் தேதி அன்று நிலைமை மோசமாகி சங்கரலிங்கனார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். 13.10.1956 அன்று அவருடைய உயிர் பிரிந்தது.
மொத்தமாக 75 நாள். மொழிக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்ட ஒரே போராளி இவர்தான்.
. இவர் உண்ணாவிரதம் இருந்த ஒவ்வொரு நாளும் செய்திகள் தீப்பொறியாக நாடு முழுவதும் பரவி விழுந்தன. ஒவ்வொரு நாளும் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்து வந்தார்.. சங்கரலிங்கத்தை பார்க்க ஒவ்வொரு தலைவராக ஓடி வந்தார்கள். "இந்த உண்ணாவிரதம் வேண்டாமே... நிறுத்தி கொள்ளுங்களேன்" என்று ம.பொ.சிவஞானம்., காமராசர், கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா என கோரிக்கை மேல் கோரிக்கை விடுத்தும், அசைந்து கொடுக்கவில்லை சங்கரலிங்கம்.
இறுதியாக, சங்கரலிங்கம் அறிஞர் அண்ணாவிடம், "அண்ணா! நீங்களாவது என்னுடைய ‘தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை' நிறைவேற்ற சொல்லுங்களேன்... ஒருவேளை நான் இறந்த பிறகாவது என் கோரிக்கையை நிறைவேற்றுவார்களா? " என்று ஏக்கமாக கேட்டார். 76-வது நாள் உடம்பு மோசமாகி ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிரும் பிரிந்துவிட்டது.
அப்போது அவருக்கு வயதோ 78. அழுத்தங்கள் சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதமும், கோரிக்கையும், மறைவும் தமிழக அரசியலை அதிர்ச்சிக்கும், சலசலப்புக்கும் உண்டாக்கியது. ‘தமிழ்நாடு' என்று பெயர் சூட்ட அழுத்தங்கள் தரப்பட்டன. ஆனால் காங்கிரஸ் அரசு அதற்கும் செவிசாய்க்கவில்லை. 1967 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அண்ணா தலைமையிலான திமுக அரசு, ‘தமிழக அரசு' என்று பெயரை மாற்றி வரலாறு படைத்தது. தீர்மானம் அதன் தொடர்ச்சியாக 1968 ஜூலை 18-ம் தேதி மெட்ராஸ் ஸ்டேட் என்பதை ‘தமிழ்நாடு' என பெயர் மாற்றி தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசின் பெயர் மாற்ற சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பிறந்த நாள் அது மட்டுமல்ல, நவம்பர் 1ம் தேதிதான் மொழி வழி மாநிலங்கள் பிறந்தன. ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், கேரளம் உள்ளிட்டவை பிரிந்து சென்றன. அந்த மாநிலங்களில் இந்த நாளை சிறப்பாக மாநிலம் பிறந்த நாளாக கொண்டாடி வருகின்றனர். இதன் அடிப்படையிலும் நவம்பர் 1ம் தேதியை தமிழ்நாடு பிறந்த நாளாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. தமிழ்நாடு நாள் இந்த வரலாற்று சம்பவத்தின் அடுத்த கட்டத்துக்கு தமிழகத்தை கொண்டு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக