புதன், 30 அக்டோபர், 2019

நாடு முழுவதும் பொது கிரிமினல் சட்டம் உள்ளதா?


ந்திய கிரிமினல் சட்டம்,இந்திய த
ண்டனை சட்டம் என்பது நாடு முழுவதற்க்கும் ஒரே மாதிரியாக செயல் படுத்த படுவதில்லை என்பதற்கு ஏராளமான உதாரணங்களை பார்க்கலாம்.

மதுவை எடுத்து கொண்டால் அது எல்லா மாநிலங்களிலும் அமலில் இல்லை. சில மாநிலங்களில் மது தடை செய்யபட்டுள்ளது.அங்கு மது அருந்துவதோ,மதுவை விற்பனை செய்வதோ மிக பெரிய  கிரிமினல் குற்றம் ஆனால் தமிழ் நாட்டில் மதுவை அரசே விற்பனை செய்கிறது.
மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் விபச்சார விடுதிகள் அரசு அனுமதி பெற்று இயங்குகிறது.ஆனால் சென்னையில் அதற்க்கு தடை உள்ளது.
இந்திய தண்டனை சட்டமும் மாநில த்திற்க்கு மாநிலம்
மாறுபடும்.உதாரணமாக ஐபிசி ipc506/2 சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்யும் பட்சத்தில் சில மாநிலங்களில்  பினை வழங்கபடுகிறது.
இன்னும் சில மாநிலங்களில் பினை வழங்க முடியாத சட்டப் பிரிவாக கருத படுகிறது.அதைப் போல சட்டபிரிவு 353 அரசு ஊழியரை வேலை செய்யவிட்டாமல் தடுக்கும் நபர்கள் மீது கீழ் கண்ட வழக்கு பிரிவில் கைது செய்தால் ஒரு சில மாநிலங்களில் பினை கொடுக்கப்படுகிறது.இன்னும் சில மாநில ங்களில் பினையில் வெளி வரமுடியாத சட்டமாக அந்த பிரிவு கருதப்படுகிறது.
குற்றவியல் நடைமுறை சட்டம்
சட்ட பிரிவு 438 கீழ் பதியப்படும் என்று தெரிந்தால் அதற்க்கு முன் ஜாமீன் வழங்களாம் என்கிறது.இது தமிழ் நாட்டில் பொருந்தும்  உ.பி  போன்ற மாநிலங்களில் முன் ஜாமீன் முறை கிடையாது
வட கிழக்கு மாநிலங்களில் குறிப்பாக நாகாலாந்து, சிக்கீம்,மிஜோரம்,மணிப்பூர் போன்ற மாநிலங்களில்  நமது கிரிமினல் சட்டங்கள் அங்கு பொருந்து வது கிடையாது ,மிக முக்கியமாக தேசத்தின் ஒருங்கிணைந்து பகுதியாக கருதப்படும் ஜம்மு கஷ்மீர் உள்ளிட்ட மாநில ங்களில் சிறப்பு சட்டங்கள் உள்ளது.
இதனை சட்ட புத்தகத்திலேயே குறிப்பிட்டிருப்பார்கள்.
இது சில உதரணங்கள் தான் இன்னும் பல முரண்பட்ட சட்டங்கள் இன்னும் ஏராளமாக இருக்கின்றது
இப்படி கிரிமினல் சட்டமே பொருந்தாத போது,
 எப்படி பொது சிவில் சட்டம் பொருந்தும்!.....

கருத்துகள் இல்லை:

ஷெர்னியும் ஆவ்னியும்!

நடிகை வித்யா பாலன் நடிப்பில் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் , ‘ ஷெர்னி ’ . அமித் மஸூர்கர் இயக்கியுள்ள இப்படத்தில்...