புதன், 1 நவம்பர், 2017

இஸ்லாமும் அரசியல் தகுதியும்

*மிகவும் பலனுள்ள கட்டுரை சகோதரர் கள் கட்டாயம் வாசிக்கவும், பல நல்ல தகவல்களை, படிப்பினைகளை கொண்டுள்ளது...* *ஒவ்வொரு வரிகளையும் விரும்பி படித்தேன்...*
** *//இஸ்லாம் அரசியல் தகுதியாக அமானிதம், பலம் ஆகிய இரு பண்புகளையும் கருதுகிறது.//* #அமானிதம் எனும் பண்புதான் மிகப் பெரும் பாதுகாப்பரணாக திகழ்கிறது. பலம் எனும் பண்பு அரசியல், இராணுவ பகுதிகளில் முழுமையாக ஈடுபட்டு முன்மாதிரிமிக்க பணியொன்றை சமூகத்துக்காக செய்து காட்டுவதற்கு துணை நிற்கிறது. அமானிதம், பலம் ஆகிய இரு பண்புகளும் மிக சொற்பமானவர்களிடமே ஒருசேரப் பெற்றிருக்கின்றன. ஒருசேரப் பெற்ற சிலரிடத்திலும் அவ்விரு பண்புகளையும் சம அளவில் பெற்றவர்கள் மிகமிக குறைவானவர்களே. பலம், அமானிதம் ஆகிய இரு இரு பண்புகளையும் சம அளவில் பெறாதவர்களுக்கான உதாரணத்தை இப்னு தைமியா பெரிய சஹாபாக்களை கூறி மேலுள்ள பகுப்பாய்வில் விளக்குகிறார்: முதல் உதாரணம் காலித் இப்னுல் வலீத்-ரழி-. பலம் எனும் பண்பு அவரில் மிகைத்திருந்தது. தஹபீ அவரை அழகாக வர்ணிக்கிறார்: அல்லாஹ்வின் வாள், இஸ்லாத்தின் போராளி, போர்க்களங்க்ளின் சிங்கம். அமானிதத்தை மிஞ்சிய அவரது பலம்தான் இஸ்லாத்தை ஏற்ற ஒரு சமூகத்தை கூட கொலைசெய்யுமளவு தூண்டிவிட்டது. இச்செயலை நபியவர்கள் கண்டித்தது மட்டுமல்லாமல் அல்லாஹ்விடமும் மன்றாடுகிறார். அபூதர் -ரழி- இன்னோர் உதாரணம். உலகில் பற்றற்ற நிலை, பேணுதல், உண்மை, உளத் தூய்மை போன்ற பண்புகள் கொண்டவராக இருந்தார். எனினும் அவருக்கு பதவிகளை கொடுப்பதற்கு நபியவர்கள் விரும்பவில்லை. அவரது பேணுதலையும் தாண்டி அரசியல் தகுதிகளில் ஒன்றான பலம் அவரிடம் காணமப்படவில்லை என்பதே மிக முக்கிய காரணியாகும். இரு பண்புகளிலும் பூரணத்துவமடைவது மனிதனால் சாத்தியமற்றது. அபூபக்ர்-ரழி- காலிதையும் -ரழி- உமர்-ரழி- அபூஉபைதாவையும் -ரழி- பொறுப்பாளர்களாக நியமித்தமையை இப்னு தைமியா இவ்வாறுதான் ஆய்வு செய்கிறார். கூறுகிறார்: உம்ர் -ரழி- கடுமையானவராக இருந்தார். மென்மையானவரான அபூ உபைதாவை பொறுப்பாளராக்கினார். அபூபக்ர் மென்மையானவராக இருந்தார். காலிதோ கடுமையானவராக இருந்தார். விடயங்கள் மிக நிதானமாக அணுகப்படுவதற்காக கடுமையானவர் மென்மையானவரையும் மென்மையானவர் கடுமையானவரையும் தன்னோடு இணைத்துக் கொள்கின்
                      ---நன்றி Rishard Najimudeen

கருத்துகள் இல்லை:

ஷெர்னியும் ஆவ்னியும்!

நடிகை வித்யா பாலன் நடிப்பில் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் , ‘ ஷெர்னி ’ . அமித் மஸூர்கர் இயக்கியுள்ள இப்படத்தில்...