கோவை யில் இந்து முன்னனி பிரமுகர் கொல்லபட்டது கண்டித்து காவல்துரையினரின் தடையை மீறி பாஜக வினர் ஆர்பாட்டதில் ஈடுபட்டனர்.அவர்களை கைது செய்து எழும்பூர் கமிஷ்னர் அலுவலகம் எதிரில் உள்ள மண்டபத்தில் அவர்கள் தங்கவைக்கபட்டிருந்தனர். நிலையில் மாலை 4மணி அளவில் பெரம்பூரை சேர்ந்த மீரான் என்பவர் வியாபாரம் தொடர்பாக மார்வாடி ஒருவர் பணம் தர அழைத்ததின் பெயரில் அவர் அதே மண்டம் அருகிலுள்ள அலுவகத்திற்க்கு செல்லும் பொழுது சில இந்துத்துவ குண்டர்கள் அவரை சராமாரியாக தாக்கியது மட்டுமல்லாமல் பொய் பிரச்சாரத்தையும் கட்டவில்த்துவிட்டனர்.தக்கபட்ட இஸ்லமியரை காவல்துறை யினர் மீட்டனர்.அப்பொழுது காவல்துறையினரும் தாக்குதளுக்குள்ளானார்கள்.
வந்தவர் தீவிரவாதி பெட்ரோல் குண்டு கொண்டுடன் வந்தார் என்றும் ,அவருடன் மூன்று பேர் தப்பித்துவிட்டதாகவும் பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டது மட்டுமல்லாமல் கமிஷ்னர் அலுவலகத்தையும் முற்றுகையிட போவதாக நடுரோட்டில் அமர்ந்து விட்டனர் .இதில் உண்மை இல்லை என்பதை அறிந்து கொண்டு காவல்துரை பாஜகவினரை கோரிக்கைக்கு செவிசாய்க்க வில்லை. பாஜக தேசிய பொது ச்செயளாலர் எச் ராஜா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் ஆகியோர் இந்த வாலிபரை காரணமாக வைத்து வன்முறையை தூண்டுவிட்டு கலவரம் செய்து அதில் குளிர் காயலாம் என நினைத்தார்கள். ஆனால் காவல்துறை அதற்க்கு இடம் கொடுக்கவில்லை. காவல்துறை யினரின் கட்டுபாட்டிலிருந்த அந்த வாலிபர் நீண்ட விசாரனைக்கு பிறகு இரவு 11 மணி அளவில் விடுவிக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக