`ஒரு யுத்த களத்தில் வெற்றியை குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை வைத்து கணிப்பிட முடியாது ,பலியான பொது மக்களின் எண்ணிக்கையை வைத்தோ ,நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் நிர்மூலமாக்கபட்டதை கொண்டோ இறுதி வெற்றி தீர்மானிக்கப்படுவதில்லை என்பதற்கு சமீபத்திய உதாரணம் இஸ்ரேல், காசா போர் .
அன்றைக்கு தானாக பொய் காரணம் கூறி துவக்கிய போரை இன்றைக்கு எப்படிடா? போரை நிறுத்தலாம் என்று யோசிக்கும் அளவிற்கு கமாஸ் படை வீரர்கள் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்
சர்வதேச சமூகத்திடம் இஸ்ரேல் கெஞ்சுகிறது போரை எப்படியாவது நிறுத்த சொல்லுங்கள் என்று இன்றைய ஹிந்து நாளிதழ் சொல்கிறது .
கமாசை ஏற்று கொள்ளமாட்டேன் என்றவர்கள் இன்றைக்கு மறைமுக பேச்சுவார்த்தைக்கு கூட தயார் என்கிறது இஸ்ரேல் .
இந்தளவிற்கு கீழிறங்க இஸ்ரேலுக்கு என்ன நேர்ந்தது என்பது போன்ற எண்ணம் உங்கள் மனதில் ஓடுவது தெரிகிறது .ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்ற இப்போரில் இஸ்ரேலின் மிக முக்கிய படை தளபதிகளையும் மிகுந்த பொருளாதார இழப்பையும் அடைந்திருக்கிறது இதனை நான் சொல்ல வில்லை.இஸ்ரேலின் முக்கிய எழுத்தாளர் ஒருவரான "கிளெட் அட்ஸ்மோன்" இப்படி கூறுகிறார்
இஸ்ரேல் முக்கிய வீரர்கள் சவபெட்டியில்களில் நாடு திரும்புவது காசாவில் இனியும் காலடி எடுத்து வைப்பதற்கு தயங்கும் நிலையை உருவாகியுள்ளது . மேலும் நிலைமை இவ்வாறு தொடருமெனில் எதிர்கால இஸ்ரேலிய இராணுவம் அனுபவ மிக்க தளபதிகளற்ற கத்துக்குட்டி படைகள் தான் இருக்கும்
எனவே தந்திரமாக இஸ்ரேலை வலைக்குள் சிக்கவைத்து கமாஸ் இப்போரில் தங்களுடைய இலக்கில் வெற்றி கண்டுள்ளது தெளிவாகிறது என்கிறார்
-- எனவே நீதிக்கு என்றைக்கும் வெற்றி உண்டு என்பதை இந்த வரலாறு நிரூபிக்கிறது 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக