பழைய பாகிஸ்தான் வீடியோவை எடிட் செய்து பயன்படுத்தி இந்து - முஸ்லீம் கலவரம் பரவச் செய்து முஸ்லீம்களை கொல்லும் ஹிந்துத்துவா சக்திகள்!
4 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மீது எப்.ஐ.ஆர். தாக்கல்!
4 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மீது எப்.ஐ.ஆர். தாக்கல்!
இஸ்லாமியனாக பிறந்து விட்ட ஒரு குற்றத்தைத் தவிர வேறு எந்த குற்றமும் இந்த மக்கள் செய்து விட வில்லை. இன்று சொந்த நாட்டிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். உண்ண உணவில்லை: உடுக்க உடையில்லை: இருக்க இருப்பிடம் இல்லை. அத்தனையையும் இந்துத்வா வாதிகள் எரித்து நாசமாக்கியுள்ளனர்.!
குஜராத்தில் எவ்வாறு இன அழிப்பு செயல்படுத்தப்பட்டதோ அதே பாணியை பின் பற்றி இங்கும் முஸ்லிம்கள் குறி வைத்து தாக்கப்பட்டுள்ளனர். ஜாட் இனத்தவரின் கிராமத்துக்கு கேமரா மேன் சென்ற போது அந்த மக்கள் 'வெளியிலிருந்து இருட்டான நேரத்தில் ஒரு கும்பலாக ஒரு கூட்டம் வந்து இந்த அழிவை செய்து விட்டு சென்றுள்ளது. உள்ளூர் காரர்கள் யாரும் இந்த இன அழிப்பில் ஈடுபடவில்லை' என்று சொல்கின்றனர். உள்ளூர்காரர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இவ்வளவு பெரிய இன அழிப்பை செய்து விட முடியுமா?
நாட்டு மக்கள் எப்படி போனாலும் பரவாயில்லை: எத்தனை உயிர்கள் போனாலும் எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும்: மோடியை பிரதமராக்கிப் பார்க்க வேண்டும். சிதறுண்டு கிடக்கும் இந்து ஓட்டுக்களை இது போன்ற கலவரங்களின் மூலம் பிஜேபிக்கு திருப்ப வேண்டும்: என்ற ஒற்றை எண்ணத்திலேயே இந்துத்துவா வாதிகள் செயல்பட்டு வருகின்றனர். இது இந்து மதத்தை மேலும் சிக்கலாக்கி அந்த மதத்தை அழிவின் விளிம்புக்கே கொண்டு சென்று விடும் என்பதை ஏனோ இவர்கள் அறிந்து கொள்ளவில்லை. இந்த ஏழைகளின் கண்ணீர் இந்த அயோக்கியர்களை இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் பிடிக்கும். அதுவரை நாமும் பொறுப்போம்.
Posted by சுவனப் பிரியன்
முஸாஃபர் நகர்:. ஜாட் இனத்தைச் சார்ந்த இளம் பெண்ணொருத்தியை முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த ஒரு அப்பாவி வாலிபர் ஒருவர் தொல்லை கொடுத்தார் என்று பொய் குற்றம் சாட்டி அவர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கலவரம் உருவானது.
இந்த கொலைக்கு பழி வாங்க கொல்லப்பட்ட வாலிபரின் உறவினர்கள் இரண்டு பேரை அடித்துக் கொலை செய்தனர். காப் பஞ்சாயத்துகளின் ஆதிக்கம் நிலவும் மேற்கு உ.பி.யில் குடும்ப கெளரவத்தின் பெயரால் நடக்கும் இத்தகைய படுகொலைகள் அபூர்வம் அல்ல.
இந்த மோதலில், தொலைக்காட்சி ஒன்றின் பகுதிநேர நிருபர் ராஜேஷ் வர்மா, போலீஸ் புகைப்படக்காரர் இஸ்ரார் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்..
ஆனால், மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஹிந்துத்துவா சக்திகள் இச்சம்பவத்தை முதலீடாக பயன்படுத்த சதித் திட்டம் தீட்டினர். சகோதரியின் மானத்தை காக்க முன்வந்த ஹிந்து இளைஞர்களை முஸ்லிம்கள் அடித்துக் கொலை செய்தார்கள் என்ற போலியான வீடியோவை ஹிந்துத்துவா சக்திகள் பரப்புரை செய்தனர்.
பாரம்பரிய முஸ்லிம் அடையாளத்தைக் கொண்ட சிலர் இரண்டு இளைஞர்களை கொலை செய்வது போன்ற காட்சி வீடியோவில் அடங்கியுள்ளது. ஆனால், இந்த வீடியோவில் இடம் பெற்ற சம்பவம் 2010-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள சியால்கோட்டில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவமாகும்.
இதனை எடிட் செய்து கலவரத்தை பரவச் செய்ய ஹிந்துத்துவா தீவிரவாத சக்திகள் பயன்படுத்தியுள்ளனர். இணையதளம், ப்ளூ டூத் வழியாக காட்டுத் தீ போல இந்த வீடியோ பரவியது. உள்ளூர் பா.ஜ.க. எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்கள் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளனர்.
மீரட் மாவட்டம் சர்தானா தொகுதி எம்.எல்.ஏ. தாக்கூர் சிங்கித் சிங், தனது ஃபேஸ்புக் ப்ரொஃபைலில் இந்த வீடியோவை பதிவேற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து 500 பேர் அவருடைய வீடியோவை ஷேர் செய்துள்ளனர். “முஸாஃபர் நகரில் என்ன நடக்கிறது என்பதை பாருங்கள்” என்பது அந்த வீடியோவின் தலைப்பாகும். பிரபல ஹிந்தி பத்திரிகையான தைனிக் ஜாக்ரன் இந்த போலி வீடியோவின் ஸ்கீரீன் ஷாட்டை வெளியிட்டதன் மூலம் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது.
இது குறித்து மாநில காவல்துறை ஏ.டி.ஜி. (சட்டம்-ஒழுங்கு) அருண் குமார் கூறியது: “முஸாஃபர் நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 2 நாள்களுக்கு முன் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு கிராமத்தில் 2 பேர் கொல்லப்பட்டது தொடர்பான போலியான ஒரு விடியோ காட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
அந்த பாகிஸ்தான் விடியோ காட்சியை நாங்கள் முடக்கினோம். எனினும், துரதிருஷ்டவசமாக அந்தக் காட்சி அடங்கிய சி.டி.க்கள் அந்தக் கிராமத்தில் புழக்கத்தில் விடப்பட்டன. இதைத் தொடர்ந்து, இரு இடங்களில் மத ரீதியிலான மோதல்கள் ஏற்பட்டன.
வகுப்புக் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்த போலீஸ், வீடியோவை முடக்கியதோடு, ஃபேஸ்புக் மூலம் ஷேர் செய்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. உள்ளிட்ட 229 பேர் வழக்குப் பதிவு செய்தனர்.
தடை உத்தரவுகளை மீறியதற்காக ஹுக்கும் சிங், சுரேஷ் ரானா, பார்த்தெண்டு, சங்கீத் சோம் ஆகிய 4 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மீதும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஹரேந்திர மாலிக் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
போலி ஆவணம் தயாரித்தல், வகுப்புவாதத்தை கிளர்ந்து விடுதல், சதித் திட்டம் ஆகிய பிரிவுகளிலும், ஐ.டி. சட்டப் பிரிவின் அடிப்படையிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இணையதளத்தில் வீடியோவை தடை செய்த பிறகும் அதற்கு முன்பே இந்த வீடியோவின் சி.டி.க்கள் வேகமாக புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பு வகிக்கும் கூடுதல் டி.ஐ.ஜி. அருண் குமார் தெரிவித்துள்ளார்.
..இந்தக் கலவரத்தின் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். கலவரத்தில் உயரிழந்த தொலைக்காட்சி நிருபரின் குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் இழப்பீடும், இறந்த மற்றவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடும் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
Ref:http://www.thoothuonline.com
நரேந்திர மோடியை புகழ்வது போன்று இந்துத்வாக்கள் உருவாக்கிய அமிதாப் பச்சனின் போலி வீடியோ.
மும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை புகழ்ந்து தள்ளிய வீடியோ யூ டியூப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இது போலி வீடியோ என்று அமிதாப் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கடந்த 2007ம் ஆண்டு லீட் இந்தியா என்ற பிரச்சாரத்தை டைம்ஸ் ஆப் இந்தியாவுக்காக செய்தார்.
அந்த வீடியோவில் அவர் நாட்டைப் பற்றி பெருமையாக பேசியிருப்பார்.
இந்நிலையில் யூ டியூப்பில் அமிதாப் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அடுத்த பிரதமராக ஆக்க ஆதரவு தெரிவித்து பேசுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் அவர் மோடி தான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அந்த வீடியோ போலியானது என்று அமிதாப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, போலி, போலி, போலி!! இந்த சட்டவிரோத செயலால் நான் கோபம் அடைந்துள்ளேன்... இதை பார்த்து கண்டனம் தெரிவியுங்கள். பொய்யான வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்...
2007ம் ஆண்டில் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்காக நான் லீட் இந்தியா பிரச்சாரம் செய்தேன்.
அப்போது நான் நம் நாட்டைப் பற்றி பெருமையாக பேசியிருந்தேன். அதை வைத்து யாரோ பொய்யான வீடியோவை தயாரித்து என் குரல் போன்று பேசி லீட் இந்தியா வீடியோவில் இருந்ததற்கு மாறாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நான் புகழ்வது போன்று பேசியுள்ளனர்.
இந்த வீடியோவை உருவாக்கி யூ டியூப்பில் வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கமாறு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.
Ref:http://tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக