சீன அரசால் துருக்கி இன முஸ்லிம்கள் மற்றும் பிற இன சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடப்படும் அநீதிகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலக தலைவர்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் உலக முஸ்லிம் சமூகம் மௌனம்
கிழக்கு துர்கிஸ்தான் பகுதியை சார்ந்த உய்குர் இன முஸ்லிம்கள் மீது திட்டமிடப்பட்ட இன சுத்திகரிப்பினை சீன அரசு செய்து வருவது குறித்து அதிர்ச்சி தரும் அறிக்கைகள் சீனாவில் இருந்து வருகின்றன. எந்தவித உரிமைகளும் இல்லாத வாழ்க்கை வாழ அவர்கள் நிர்பந்திக்கப் படுகிறார்கள். சலாம் சொல்வது, மதுவை விட்டும் விலகி இருப்பது மற்றும் தங்கள் தாய் மொழியில் பேசுவது போன்ற சாதாரண மத விவகாரங்களில் ஈடுபடுவதாக தெரிந்தால் கூட அவர்கள் சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். நாஜி சித்திரவதை முகாம்களை ஒத்த இது போன்ற முகாம்களில் ஏறத்தாழ 20 லட்சம் முஸ்லிம்கள் அடைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பயிற்சி முகாம்கள் என்று சீன அரசாங்காத்தால் அறிமுகம் செய்யப்படும் இத்தகைய சித்தரவதை முகாம்களில் அடைக்கப்பட்டவர்கள் விசாரணையின் போது மனிதாபிமானமற்ற சித்தரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதோடு கடுமையான முறையில் கம்யூனிஸ சித்தாந்தங்களும் அவர்களுக்கு புகட்டப்படுகின்றன. இவர்கள் குறித்த செய்திகள் ஊடகத்திற்கும் அவர்களின் குடும்பத்திற்கும் கூட தெரிவிக்கப்படுவதில்லை. பல சமயங்களில் இந்த முகாம்களில் அடைபட்டு இறந்தவர்களின் சடலங்களை கூட அவர்களது உறவினர்களிடம் வழங்குவது இல்லை.சீன அரசாங்கத்தின் அழுத்தத்தால் முஸ்லிம் நாடுகள் உட்பட அனைத்து உலக நாடுகளும் இந்த விவகாரத்தில் பெரும்பாலும் மௌனமாக இருக்கிறார்கள். உய்குர் முஸ்லிம்களின் மீதான இந்த சித்தரவதையை கண்டித்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் சீன அரசு மீது பொருாளாதார தடை விதிக்க தயங்குகின்றன. பிற நாடுகளில் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் பாகிஸ்தான் தனது நட்பு நாடான சீனாவை திருப்திபடுத்த கள்ள மௌனம் சாதித்து வருகிறது. மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை மதிக்கும் உலக மக்கள் சீன அரசாங்கத்தின் இந்த மனித தன்மையற்ற செயலை கண்டிக்க வேண்டும் .இந்த கேவலமான அடக்குமுறையை முடிவுக்கு கொண்டு வர, அமைதியை விரும்பும் ஒட்டு மொத்த உலக நாடுகளும் முன் வார வேண்டும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக