வெள்ளி, 4 அக்டோபர், 2019

மோடி இந்த நாட்டின் தந்தையா?

காந்தியை கொலை செய்வதற்கு 10  முறை  முயற்சி நடந்துள்ளது. இதில் 9 முறை அன்றைய ஆர்எஸ்எஸ் சங்க பரிவார கூட்டங்களால் நடத்தப்பட்டது.
இந்த வரலாற்றை மறைத்து, இன்று காந்தியின் 150ஆவது பிறந்ததினத்தை அதே ஆர் .எஸ் எஸ் ஐ சார்ந்த அரசியல் பிரிவான பாஜக அரசு  கொண்டாடுவது கேலிக் கூத்தாகும்.

அன்றைக்கு காந்தியை தேசப்பிதா என்று அழைத்தபோது  அதை  ஏற்றுக்கொள்ளாதவர்கள் தான் இந்த RSS  காரர்கள்,

 "How our great a son may be,
 a son con not become the Father of the nation".
"இந்த தேசத்தின் மகனாக தான் காந்தி இருக்க முடியுமே தவிர, அவர் எவ்வளவு மேன்மைப் பொருந்தியவராக இருந்தாலும், இந்த நாட்டில் தந்தையாக முடியாது".

என்று சொன்னவர் தான் அன்றைய ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கர்.

 ஆனால்,
என்ன நடக்கிறது,
பா.ஜ.க , RSS ஐ  சார்ந்த சிலர்  மோடியே இந்த நாட்டின் தந்தை  இதை ஏற்காதவர்கள் தேசதுரோகி என்கிறார்கள்.

அடுத்து

காந்தியை தேசப்பிதா என்று அழைத்தால்,
 தேசத் துரோகி என்று பட்டம் கொடுத்து விடுவார்களோ!




கருத்துகள் இல்லை:

ஷெர்னியும் ஆவ்னியும்!

நடிகை வித்யா பாலன் நடிப்பில் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் , ‘ ஷெர்னி ’ . அமித் மஸூர்கர் இயக்கியுள்ள இப்படத்தில்...