சனி, 19 அக்டோபர், 2019

குஜராத் : பதவி உயர்வுக்கு தேர்வு எழுதிய 119 நீதிபதிகளும் தோல்வி!


குஜராத் மாநிலத்தில், மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வை எழுதியவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத அவலம் அரங்கேறியுள்ளது.இதில் விஷேசம் என்னவென்றால், தேர்வை எழுதியவர்களில் 119 பேர் உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகளாக, நீதித்துறை அதிகாரிகளாக ஏற்கெனவே பணியாற்றி வருபவர்கள் என்பதுதான். இவர்கள் தவிர ஆயிரத்து 372 வழக்கறிஞர்களும் தேர்வை எழுதி தோல்வி அடைந்துள்ளனர்.குஜராத் மாவட்ட நீதிமன்றங்களில் மொத்தம் 40 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.

விதிமுறைகளின்படி, மொத்த காலிப் பணியிடங்களில் 65 சதவிகித இடங்கள்,மூத்த உரிமையியல் நீதிபதிகளைக் கொண்டும், 25 சதவிகிதம் வழக்கறிஞர்கள் மூலமாகவும், 10 சதவிகிதம் மாவட்ட கூடுதல் நீதிபதிகளில் இருந்தும் நிரப்பப்பட வேண்டும். இதன்படி கடந்த ஜுன், ஆகஸ்ட் மாதங்களில் தேர்வுகள் நடைபெற்றன. இறுதியாக 494 வழக்கறிஞர்களும் 119 நீதிபதிகளும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், கடந்த வாரம் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நீதிபதிகள் தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சிபெறவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது நீதித்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக நீதிபதிகள் நிலை

இதற்கு முன்னர் இது போல  தமிழ்நாடு மற்றும் புதுவையில் 31 மாவட்ட நீதிபதிகளை நேரடியாக தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட முதல்நிலைத் தேர்வில் தமிழகத்திலிருந்து பங்கேற்ற 3562 பேரும், புதுவையிலிருந்து கலந்து கொண்ட 558 பேரும் ஒட்டுமொத்தமாக தோல்வியடைந்துள்ளனர். . ஆனால், ஒட்டுமொத்தமாக தேர்வை எழுதிய 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், அவற்றில் முதன்மையானவை வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததும், தவறான விடைகளுக்கு மைனஸ் மதிப்பெண் வழங்கும் முறை கடைபிடிக்கப்பட்டதும் தான். சரியான விடைகளுக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்பட்ட நிலையில், தவறான விடைகளுக்கு அரை மதிப்பெண் வீதம் கழிக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட நீதிபதிகள் பதவிக்கான போட்டித் தேர்வில் மைனஸ் மதிப்பெண் வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்பதால், அதுபற்றி போதிய விழிப்புணர்வு இல்லாமல் கிட்டத்தட்ட அனைவருமே அதிக அளவில் மைன்ஸ் மதிப்பெண்களைப் பெற்று தோல்வியடைந்துள்ளனர் .ஆனால் இது போன்ற  தேர்வு நடை முறை குஜராத்தில் கடைபிடிக்கப்பட்டதா? என்பது  தெரியவில்லை. 

கருத்துகள் இல்லை:

ஷெர்னியும் ஆவ்னியும்!

நடிகை வித்யா பாலன் நடிப்பில் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் , ‘ ஷெர்னி ’ . அமித் மஸூர்கர் இயக்கியுள்ள இப்படத்தில்...