வியாழன், 8 நவம்பர், 2018

1966 நவம்பர் 7 காமராசரைக் கொலை செய்ய முயன்ற கா(லி)விகள்














1966ஆம் ஆண்டு நவம்பர் 2 அன்று நடந்த அகில இந்தியக் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் காமராஜர், "பசுவதைத் தடைச் சட்டம்" கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை ஏற்க முடியாது என்றும், அது பைத்தியக்காரத்தனமானது என்றும் இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு எதிரானது, பெரும்பான்மை மக்கள் அசைவ உணவு உண்ணும் போது அதற்கு எதிராக அரசு முடிவெடுக்க முடியாது என்றும் கூறினார்.

1966ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று பசுவதையை எதிர்த்து டெல்லியில் நிர்வாண சாதுக்கள், சங்பரிவாரங்களின் ஆர்ப்பாட்டத்தால், டில்லி வரலாறு காணாத கலவரங்களைக் கண்டது
. அன்று மதியம் டில்லியில் காமராஜரை அவரது இல்லத்திலேயே தீ வைத்து எரித்து கொல்ல அந்த கும்பல்முயற்சி செய்தது . இதனைகண்டு காமராஜர் பயப்படவில்லை. மாறாக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவ இயக்கங்களுக்கு சவால் விட்டு  11/12/66 அன்று சேலம் பொதுக் கூட்டத்தில் பேசினார்.
குறிப்பாக அவர்களுக்கு (இந்துத்துவ இயக்கத்தினர்) பயம் என்னைப் பற்றி தான். இந்த காமராஜர் தான் சோசியலிச சமுதாயத்தினை அமைத்தே தீருவேன் என்று சொல்கின்றான். அவன் தான் அதிலே தீவிரமாக இருக்கிறான் என்கிறார்கள். என் வீட்டுக்குத் தீ வைக்கின்றான்.ஆனால் நான் இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். கடமையை செய்தே தீருவேன் என்று 11/12/66 அன்று சேலம் பொதுக்கூட்டத்தில் பேசினார் காமராஜர்.

காமராஜரை கொல்ல முயற்சித்து விட்டு, இன்று அவர் சார்ந்த சமூகத்தை ஏமாற்றி வருகிறார்கள் . காமராஜர் தனது வாழ்நாளின் இறுதிவரை இந்துத்தவ இயக்கங்களை எதிர்த்து வந்தார் என்பதே உண்மையான வரலாறாகும்.

கருத்துகள் இல்லை:

ஷெர்னியும் ஆவ்னியும்!

நடிகை வித்யா பாலன் நடிப்பில் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் , ‘ ஷெர்னி ’ . அமித் மஸூர்கர் இயக்கியுள்ள இப்படத்தில்...