உ பி கலவர சூத்திரதாரிகளும் பலன் அடைந்தவர்களும் .
பாஜக வின் ஓட்டு அரசியலில் பழியாகும் முஸ்லீம்கள்.
பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். சங்பர்வார்கள் முதல் திட்டமாகவே வி ஹெச் பி மூலம் ராமர் கோவில் விசயத்தை மீண்டும் மேலெழுப்பி பரிக்கிரமா யாத்திரையைக் கையில் எடுத்தது.
ஆனால் நீதிமன்ற உத்தரவுகள் வி ஹெச் பியின் பரிக்கிரமா யாத்திரைக்கு முட்டுக் கட்டை போட்டன. மேலும் வி ஹெச் பி யின் பரிக்கிரமா அரசியலை ஹிந்து தலைவர்களில் பலரே விரும்பவில்லை.
பரிக்கிரமா அரசியல் சதித்திட்டம் தோல்வியைத் தழுவவே, தற்போது உபியில் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பாஜக சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. குஜராத்தில் நடைபெற்ற சொஹ்ராபுதீன் ஷேக், ஜமால், இஷ்ரத் ஜஹான், பிரஜாபதி எனப் பல்வேறு போலி என்கவுண்டர்களில் தொடர்புடைய, கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டு ஜாமீனில் வெளி வந்துள்ள, நரேந்திரமோடியின் வலது கையாகக் கருதப்படும் அமித் ஷா உத்தரப் பிரதேச தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட போதே உ பி யில் பாஜக செயல்படுத்தப் போகும் திட்டம் பலருக்கும் தெரிந்து விட்டது.
போலி என்கவுண்டர் வழக்குகளில் கைது செய்யப்பட்டு, கடந்த 7 ஆண்டுகளாகச் சிறையிலடைக்கப்பட்டுள்ள குஜராத் காவல்துறை அதிகாரி வன்சாரா குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையும் அவரது சகாவான அமித் ஷாவையும் கடுமையாக விமர்சித்து போலி என்கவுண்டர்களில் இருவரின் நேரடிப் பார்வையில் தான் குஜராத் காவல்துறை செயல்பட்டது என்றும் அதற்காக 32 காவல்துறையினர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தாங்கள் செய்தது தவறு என்றால் தங்களை இயக்கிய குஜராத் அரசும் சபர்மதி சிறை வளாகத்தில் தான் இயங்க வேண்டும் என்று தமது 10 பக்க ராஜினாமா கடிதத்தில் தெரிவித்து இருந்தார்.
வன்சாராவின் ராஜினாமா கடிதம் நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தி குஜராத் அரசுக்கு எதிரான தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், வன்சாராவின் ராஜினாமா கடிதத்தை மக்கள் மனதில் இருந்து அகற்றும் பாஜகவின் சூழ்ச்சியாகவே ஆகஸ்ட் 27 அன்று உ.பி. முசாபர் நகரில் நடைபெற்ற கொலைகளுக்கு சுமார் 10 நாட்களுக்குப் பிறகு இக்கலவரம் சங்பரிவாரத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது
பொய்யாக ஜாட் இனத்தைச் சார்ந்த இளம் பெண்ணொருத்தியை ஒரு பெண்ணை சீண்டியதாக ஒரு அப்பாவி முஸ்லீம் வாலிபரை இந்துவாக்கள் கொன்று அதன் தொடர்பாக மேலும் இருவர் கொல்லப்பட்டு

தொடக்கத்தில் ஆகஸ்ட் 27 நடைபெற்ற மூன்று பேர் படுகொலை சம்பவத்தை அப்பகுதிக் காவல்துறை இரு தரப்பினர் மீதான குற்றங்களின் அடிப்படையில் துரித நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கவே,
கலவரத்தை திட்டமிட்டு காத்திருந்த பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்கள் மேலும் பொய்யான தகவல்களைப் பரப்பி கலகத்தை வலுப்பெற செய்ய
பாகிஸ்தான் சியால்கோட்டில் இரு வருடங்களுக்கு முன்னர் போதை பொருள் கடத்தியதற்காக அடித்து கொல்லப்பட்ட இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை சங்பரிவாரத்தினர் எடிட் செய்து போலி சி டி உருவாக்கி “முஸாஃபர் நகரில் என்ன நடக்கிறது என்பதை பாருங்கள்” சகோதரியின் மானத்தை காக்க முன்வந்த ஹிந்து இளைஞர்களை முஸ்லிம்கள் அடித்துக் கொலை செய்தார்கள்" என்று தலைப்பிட்டு
40000 பேர் கூடிய ஜாட் மகா பஞ்சாயத்தில் போலி வீடியோவைப் பரப்பி விநியோகித்து அப்பஞ்சாயத்துப் பேரணியில் கலந்துகொண்ட பாஜக தலைவர்கள் வகுப்புக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி ஒரு சமூகத்துக்கு எதிராக மற்றொரு சமூகத்தின் கோபக்கனலைக் கிளப்பி விட்டு
மேலும் சிவராம் குமார், இரு பாஜக எம்.எல் ஏ க்கள் முகநூல் பக்கத்திலும் அந்த வீடியோவைப் பகிர்ந்து
ஃபேஸ்புக் ப்ரொஃபைலில் இந்த வீடியோவை பதிவேற்றி இதனைத் தொடர்ந்து 500 பேர் அவருடைய வீடியோவை ஷேர் செய்து
கலவரத்தீயை பெரிய அளவில் வலுப்பெற செய்து
குஜராத்திலிருந்தும் 200க்கும் அதிகமான ஹிந்துத்துவா பாசிஸ்டுகளும் கலவரத்தில் ஈடுபட்டு சேர்ந்து கொண்டு
“குஜராத் மேம் ட்ரெய்லர் தா; யு.பி. மேம் சினிமா ஹே” (குஜராத்தில் கண்டது ட்ரெய்லர்தான்; உ.பி.யில் காணப்போவது சினிமா) என்ற முழக்கமிட்டு
ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் முஸாஃபர் நகர் மாவட்டத்தில் உள்ள புகானா முஸ்லீம்களின் வீடுகளை தீக்கிரையாக்கி
ஏழை விவசாயிகளும், கூலி வேலைககாரர்களுமான முஸ்லிம்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்துக்களையெல்லாம் கொள்ளையடித்து
பிறந்து எட்டு மாதமே ஆன 3 பிஞ்சுக் குழந்தைகளை தீயிலிட்டு குடும்பத்தினரின் முன்பாக பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து பிறந்து 8 மாதமே ஆன 3 பிஞ்சுக் குழந்தைகளை தீயிலிட்டுப் பொசுக்கி ஒன்பது வயது சிறுவனின் தலையை அடித்து சிதைத்து
மூஸ்லீம்களை தீயில் பொசுக்கி உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்கு கோரமாக குதறி கொலை செய்து
பெண்ணை இரண்டு துண்டாக வெட்டிக்கொலைச்செய்து எட்டு வயது சிறுவர்களையும் தீயில் பொசுக்கி
ஆதாரங்களை அழிப்பதற்கு சாம்பலை குளத்தில் கரைத்து சாலைகளிலும், குளக்கரைகளிலும் உடல்களை கிடக்க செய்து
. சிறுபான்மை முஸ்லிம்கள் வசிக்கும் 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் தாக்கி அழித்து
இறந்த உடல்களை போஸ்ட்மார்ட்டம் நடத்திய மருத்துவர்களைக் கூட நெஞ்சு பதறி நடுங்கச் செய்யுமளவு ஒருதலைபட்சமான கூட்டுப் படுகொலை நடத்தியிருக்கின்றனர்.
ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர்களை அகதிகளாக்கப்பட்டுள்ளனர்
சம்பவம் நடந்த தினத்திலேயே இரு தரப்பிலும் மூவர் கொலை செய்யப்பட்ட நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததை மீறி 40,000 பேர் கூடி பஞ்சாயத்து நடத்துவதற்கு அகிலேஷ் யாதவ் அரசு எப்படி அனுமதித்தது என்பது ஆச்சரியமான விசயம்.
பாஜக ஆளும் மாநிலங்கள் இன்றிப் பிற மாநிலங்களிலும்தான் சிறுபான்மையினத்தவருக்குப் பாதுகாப்பில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தி குஜராத் இனக்கலவரம் பற்றிய பேச்சுகளைக் குறைத்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட பாஜக முயன்றுள்ளதாகவே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
மூன்று கொலைகளோடு முடிந்திருக்க வேண்டிய சட்டம் ஒழுங்கு பிரச்னை ஒரு வகுப்பு கலவரமாக மாற்றப்படும் சூழலின் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் வெளி வந்தாலும் பாஜக ஓட்டு அரசியலே பிரதானமாக கூறப்படுகிறது.
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் இந்து முஸ்லீம் மோதலை கூர்மைப்படுத்துவதன் மூலம் சமாஜ்வாதியும், பாஜகவும் பலன் அடைய திட்டமிட்டுள்ளன என்றே பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
முல்லா முலாயம் என்று கூறப்படும் அளவு முஸ்லீம்களோடு நெருக்கமாக தன்னை காட்டி கொண்டாலும் இக்கலவரத்தை தடுக்க நினைத்திருந்தால் அகிலேஷ் அரசு தடுத்திருக்கலாம் என்று கோபப்படும் சிறுபான்மை அமைப்புகள் கீழ்காணும் கேள்விகளை எழுப்புகின்றனர்.
1. ஆகஸ்டு 27 சம்பவம் நடைபெற்ற உடனே ஏன் மாநில அரசு இரு தரப்பு குற்றவாளிகளையும் சிறையில் அடைத்து உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை?
2. ஆகஸ்டு 31 அன்று ஜாட்கள் மஹா பஞ்சாயத்தை கூட்டிய போது ஏன் அதை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை?
3. கூட்டம் கூட்ட தடை இருந்த நிலையில் செப்டம்பர் 7 அன்று ஜாட்களின் பஞ்சாயத்து நடக்க ஏன் அரசு அனுமதித்தது?
4. இந்துக்கள் ஆயுதங்களோடு செல்லவும் கலவரத்தை தூண்டும் பேச்சுகள் பேசப்படவும் ஏன் அரசு அனுமதித்தது?
5. கூட்டங்கள் கலவரத்தை தூண்டலாம் எனும் உளவுதுறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கை ஏன் கண்டு கொள்ளப்படவில்லை? 6. சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் வழியாக பஞ்சாயத்து உறுப்பினர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டதேன்?
7. முஸ்லீம்களின் மீது தாக்குதல் நடைபெற்ற போது ஏன் முஸ்லீம் இளைஞர்கள் எக்காரணமுமில்லாமல் கைது செய்யப்பட்டார்கள்?
ஆனால் இக்கலவரத்தில் பலன் அடைந்தது சந்தேகமின்றி பாஜகவே.
பாபர் மசூதி கலவர சமயத்தில் கூட ஜாட் இனத்தவர்கள் பாஜக பக்கம் சாயாமல் அஜித் சிங் மற்றும் சமாஜ்வாதி பக்கமே இருந்தனர்.
ஆனால் இக்கலவரத்தை வாய்ப்பாக பயன்படுத்தி போலி வீடியோக்களை வெளியிட்டு வன்முறையை தூண்டும் பேச்சுக்களை தூண்டி இந்துக்களின் பாதுகாவலர்களாய் தங்களை காட்டும் முயற்சியில் பாஜக ஒரளவு வென்று விட்டது என்றே சொல்லலாம்.
இதை விட கவலையளிக்கும் விஷயம், பாபர் மசூதி இடிப்பின் போது கூட ஒற்றுமையாய் வாழ்ந்த ஜாட் மற்றும் முஸ்லீம் மக்களின் தற்போதைய நிலை.
அகதிகள் முகாம்களிலும் அருகிலுள்ள மதராசாக்களிலும் தஞ்சம் புகுந்திருக்கும் 10,000 முஸ்லீம்களும் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பும் சூழல் இல்லாததது, உத்தரபிரதேசத்தின் சமூக சூழலை மோசமான காலகட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது என்பது மட்டும் கசப்பான உண்மை.
காங்கிரஸ் அரசு மீது தினம்தோறும் பல்வேறு ஊழல் புகார்கள் கூறப் பட்டாலும் எதிர்க் கட்சியான பாஜகவும் ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சியல்ல என்பதற்கு பாஜக ஆட்சியில் நடைபெற்ற சவப் பெட்டி ஊழல், கர்நாடகாவில் நடைபெற்ற சுரங்க ஊழல் ஆகியவையே போதுமான சாட்சி.
அடானி குழுமத்துக்குக் குறைந்த விலைக்கு நிலம் தாரைவார்க்கப் பட்டது எனப் பல்வேறு ஊழல்கள் மூடி மறைக்கப் பட்டுள்ளன.
தோண்டினால் காங்கிரசும் பாஜகவும் ஊழல் விசயத்தில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர் எனபது தெரிய வரும்.
மக்கள் பணத்தைச் சுரண்டும் தனியார்கள், தனியார்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அவர்களை வளர்த்து விடும் அரசியல்வாதிகள் என, பெரும்பான்மையான இந்திய அரசியலே ஊழலில் திளைத்துள்ள நிலையில் அரசியல்வாதிகளால் இனி தங்கள் சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்க முடியாத நிலை.
எளிதாக மக்களின் வாக்குகளைப் பெறும் தந்திரமே வெள்ளையன் கண்டுபிடித்த பிரித்தாளும் சூழ்ச்சி! வெள்ளையனின் பிரித்தாளும் சூழ்ச்சியையே பாஜக கையிலெடுத்துக் கொண்டு மத்தியில் ஆட்சியைக் கைப்பற்ற முனைப்போடு இறங்கியுள்ளது.
Ref: Inneram.com +++
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக