செவ்வாய், 8 மே, 2012

மதுரையில் கடந்த ஏப்ரல் 28 அன்று மாநாடு நடத்த, 6 மாதமாக திட்டமிட்டும், மழையை காரணம் காட்டி மாநாடு தள்ளி வைக்கப்பட்டது.



மாநாடு தள்ளி வைக்கப்பட்டதற்கு உண்மை காரணம் மழை அல்ல. கடந்த 2001ம் ஆண்டு பாஜக ஆட்சியின் போது, கட்சியின் தலைவராக இருந்த "பங்காரு லட்சுமணன்" போலி ஆயுத பேரத்தின் போது, லஞ்சம் பெற்றதை வீடியோ ஆதாரம் மூலம் அம்பலப்படுத்தியது "தெஹெல்கா" இணயதளம். அந்த வழக்கின் தீர்ப்பு, மதுரை மாநாட்டுக்கு ஒரு நாள் முன்னதாக வழங்கப்பட்டது. பங்காரு லட்சுமணன் லஞ்சம் பெற்றது உண்மை என தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் அவருக்கான தண்டனையை மறு நாளைக்கு (மாநாடு அறிவிக்கப்பட்ட நாள்) அறிவிப்பதாக நீதிமன்றம் கூறியது. திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக, வெளியே தலை காட்ட முடியாத பாஜக டெல்லி தலைவர்கள், மதுரை மாநாட்டுக்கு வர மறுத்து விட்டனர். அன்றைக்கு தலைவர்கள் வராமல் நின்று போன மாநாடு, இன்று தொண்டர்களை வர விடாமல், தமிழகம் முழுவதும் பீதி கிளப்பும் வகையில் மதுரை சைக்கிள் குண்டு சம்பவம் அமைந்து விட்டது. இதை ஒரு விளம்பரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய பாஜக, கலவரங்களை ஏற்படுத்த குண்டுகளை வெடிக்க செய்து, பிற உயிர்களை பறிக்கும் சங்கபரிவாரங்கள், தங்களது உயிர் பயம் காரணமாக மாநாட்டுக்கு வரமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. இதை தான் விதியின் சதி என்பதோ? உண்மையில், குண்டு வைத்து அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தால், கடந்த ஆறு மாதமாக பணிகள் நடை பெற்று வந்த நிலையில், மாநாடு குறிக்கப்பட்ட நாளான ஏப்ரல் 28 வரை வைக்கப்படாத குண்டு, மாநாடு தள்ளிவைக்கப்பட்ட, இந்த சின்ன அவகாசத்தில் குண்டு வைக்க திட்டமிட முடியுமா? இது புரிந்தும், மீடியாக்கள் போட்டி போட்டுக்கொண்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகின்றனர். போலீசும் அரசும், அப்பாவி முஸ்லிம்களை குற்றப்பரம்பரையினராக சித்தரிக்க முற்படுகின்றனர். இது போன்ற அச்சுறுத்தல்களுக்காக, ஒரு போதும் அச்சப்பட மாட்டார்கள் அல்லாஹ்வின் அடியார்கள்.

கருத்துகள் இல்லை:

ஷெர்னியும் ஆவ்னியும்!

நடிகை வித்யா பாலன் நடிப்பில் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் , ‘ ஷெர்னி ’ . அமித் மஸூர்கர் இயக்கியுள்ள இப்படத்தில்...